20-04-23
இன்றைய நாளுக்கான கிருபை !
ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய அற்புதமான அன்பை அனுபவியுங்கள் !
மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
15. இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
16. இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
(யோவான் 20:11, 15-17)NKJV .
கல்லறை காலியாக இருந்ததை கண்ட மகதலேனா மரியாள் தனது அன்பான இயேசு நாதர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதற்கான எந்த புரிதல் இல்லாமல் அழுது கொண்டிருந்தாள். இயேசுவின் உண்மையான அன்பையும்,மன்னிப்பையும் அவள் ருசித்திருந்ததால்,ஆண்டவர் மீதுள்ள அதீத அன்பின் காரணமாக அவள் அடக்கமுடியாமல் அழுதுகொண்டிருந்தாள்.
இயேசு அவளை நேசித்த அளவுக்கு இதற்கு முன்பு யாரும் அவளை நேசித்ததில்லை, இன்றும்,இது நம் அனைவருக்கும் பொருந்தும் உண்மை. அவள் அவரது அன்பில் மிகவும் திளைத்திருந்த காரணத்தினால் , அவளுக்கு எதுவும் முக்கியமில்லை.அவளுடைய வாழ்க்கையை கூட ஒரு பொருட்டாக நினைக்கவில்லை .மேலும்,ஆழ்ந்த விரக்தியோடு அழுதுகொண்டே,அவரது உடலை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள்,ஒரு வேளை அந்த உடலைக் கண்டுபிடித்திருந்தால்,அவரை எடுத்துச் சென்றிருப்பாள்.
உயிர்த்தெழுந்த இயேசுவின் முதலாவது கடமை என்னவென்றால், அவர் முதலில் பரலோகத்திற்கு ஏறி, அனைத்து மனிதகுலத்தின் மீட்பிற்காகவும், பிதாவாகிய கடவுளுக்கு அவருடைய இரத்தத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்பதேயாகும்.ஆனால்,மரியாளின் வைராக்கியமான அன்பு ,பிடிவாதமான அன்பு ,மற்றும் உறுதியானஅன்பு நிச்சயமாக பிதாவாகிய மனதைத்தொட்டு இயேசுவிடம் பரத்துக்கு ஏறும் முன் முதலில் மரியாளுக்கு காட்சியளிக்க பரிந்துரைத்திருப்பார்.என்ன அற்புதமான அன்பு !
என் அன்பானவர்களே ,இன்று,அவருடைய அசாத்தியமான,அற்புதமான அன்பில் திளைத்திருப்போம்.நமது உள்ளார்ந்த அங்கலாய்ப்பும்,கண்ணீரும் இதுவரை செய்யப்பட்ட எந்த உரத்த பிரார்த்தனைகளையும் விட சத்தமாக பேசும்.அது கட்டாயமாக நம் வாழ்வில் அற்புதத்தை நடப்பிக்கும்.ஆமென் 🙏.
ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய அற்புதமான அன்பை அனுபவியுங்கள்!
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்