29-08-23
இன்றைய நாளுக்கான கிருபை!
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து ,அவர் உங்கள் எதிரிகள் முன்னிலையில் ஏற்படுத்திய விருந்தை அனுபவியுங்கள்!
5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம் 23:5-6) NKJV.
இந்த சங்கீதம் 23ஐ தாவீது எப்போது எழுதினார்? அவர் மேய்ப்பனாக இருந்த காலமா அல்லது இஸ்ரவேலின் ராஜாவாக ஆன பிறகா ?
அவர் மேய்ப்பராக இருந்தபோது எழுதியிருந்தால் இந்த வார்த்தைகள் அவருடைய எதிர்காலத்திற்காக தீர்க்கதரிசனமாக பேசப்பட்டதாயிருக்கும்.ஆனால்,அவர் அரசரான பிறகு எழுதப்பட்டிருந்தால், அவர் தேவனின் அற்புதமான அன்பு மற்றும் உண்மைத்தன்மையின் சாட்சியைப் பகிர்ந்து கொள்கிறதாயிருக்கும்
.
ஒரு சில ஆடுகளுடன் அலைந்து திரிந்த ஒரு ஏழை மேய்ப்பனான நிலையிலிருந்து, ஒரு தேசத்தின் மக்களால் சூழப்பட்ட ஒரு அரசனாக உயர்ந்த நிலைக்கு தேவன் அவரை உயர்த்தினார்.
என் அன்பானவர்களே, இதுவே உங்களுக்கும் சாட்சியாக இருக்கும். சமுதாயத்தில் எங்கிருந்தாலும் நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். இன்று என் வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக உங்களுக்கு இருக்கலாம்.இதுவே ,இறுதியில் உங்கள் சாட்சியாக மாறும், ஏனெனில் இது ஏற்கனவே தேவனோடு உங்களுக்காக செய்யப்பட்ட ஒப்பந்தமாயிருக்கிறது.
வேதனையையும் அவமானத்தையும் கடந்து வந்த நீங்கள், இன்று இரட்டிப்பு மரியாதையை அணிந்து, தேவன் உங்களுக்கு கொடுக்கும் புதிய பெயரையும்,கனத்தையும் அனுபவிப்பீர்கள் .
நல்ல மேய்ப்பரிடம் உங்களை விட்டுகொடுத்து உங்களை ஒப்படைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் எதிரிகளுக்கு முன்பாக நீங்கள் தாழ்த்தப்பட்டால், ஆண்டவராகிய எபினேசர் உங்களை உயர்த்தி, உங்கள் எதிரிகளின் முன்னிலையில் உங்களை உட்கார வைப்பார்.
உங்கள் எதிரிகள் முன்னிலையில் கடவுள் உங்களுக்கு முன்பாகவே ஒரு மேஜையை தயார் செய்துள்ளார்! இந்த வசனம் (message Translation ல்) வேறு வார்த்தையில் இவ்வாறாக கூறப்படுகிறது-“எனது எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு அறுசுவை ஆடம்பர உணவை தயார்செய்துள்ளீர்.” இது அருமை!
இயேசுவின் நாமத்தில் உன்னதமாக வாழவும், கம்பிரமாக நடக்கவும், ஆவிக்குரிய ஆலோசனையில் செயல்படவும் உங்களை ஆசீர்வதிக்கிறேன். ஆமென் மற்றும் ஆமென் 🙏.
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து ,அவர் உங்கள் எதிரிகள் முன்னிலையில் ஏற்படுத்திய விருந்தை அனுபவியுங்கள்
கிருபை நற்செய்தி தேவாலயம் .