நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய நன்மையையும் நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தையும் அனுபவியுங்கள் !

scenery

31-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய நன்மையையும் நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தையும் அனுபவியுங்கள் !

1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் ; நான் தாழ்ச்சியடையேன்.
6 . என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம் 23:1, 6) NKJV

என் அன்பான நண்பர்களே,இந்த மாத இறுதிக்குள் வந்துவிட்டோம்,நல்ல மேய்ப்பரான இயேசுவுடன் நீங்கள் ஒரு அழகான ஆன்மீக பயணத்தை மேற்கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இதில் முக்கியமானது என்னவென்றால், நம் எல்லோருக்கும் இயேசுவுடனான ஒரு தொடர் உறவு கட்டாயமாக தேவைப்படுகிறது .அது சிறியதோ பெரியதோ, கையாளக்கூடியதோ இல்லையோ, மகிழ்ச்சியோ துக்கமோ நம் எல்லாப் பிரச்சினைகளையும் அவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.நாம் அவருடன் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை நேரத்தில் மட்டுமல்ல. பலமுறை பேசுகிற உறவுக்குள் வரவேண்டும்.

இயேசுவோடு நமக்குள்ள உறவை உண்மையாக்குபவர் பரிசுத்த ஆவியானவர்! அவர் சர்வவல்லமையுள்ள தேவனின் பிரசன்னமாக இருக்கிறார்.நமது முதன்மைக் காரியமாக அவருக்கு முன்னுரிமை அளிக்கும்போது ,நம்மைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் சீரமைக்கவும் நம்மீது கவனம் செலுத்தி நம்மைப் பின் தொடர வழிச்செய்கிறது .
.
இது தாவீதின் அனுபவம், தன் வாழ்வின் மேய்ப்பனாகிய தேவனை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைத்ததால் , நன்மையும் கருணையும் தன் வாழ்நாள் முழுவதும் தம்மைப் பின்தொடர்ந்தன என்று சாட்சி கூறுகிறார்.

நீங்கள் கர்த்தரைப் பின்பற்றும்போது, ​​எல்லா நன்மைகளும்,கிருபைகளும் மற்றும் இரக்கமும் உங்களைப் பின்தொடரும்.
பதவி உயர்வு , ஊதிய உயர்வு , நல்ல ஆரோக்கியம், அமைதி ,மகிழ்ச்சி மற்றும் எந்த ஆசீர்வாதத்திற்கும் பின் தொடர்ந்து நீங்கள் ஓட வேண்டியதில்லை.உங்கள் ஆத்துமாவின் நல் மேய்ப்பனை உங்கள் கண்மணியாக வைத்திருக்கும் மாத்திரத்தில் இவை அனைத்தும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைப் பின்தொடரும். அல்லேலூயா !

நீங்கள் ஆசீர்வதிக்கிறவரை தேடும்போது,பரிபூரண ​​ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடி,உங்களைக் கண்டுபிடித்து, இயேசுவின் நாமத்தில் நிரம்பி வழியும் அளவிற்கு உங்களைச் சூழ்ந்து கொள்ளும் .ஆமென் 🙏

என் அன்பு நண்பர்களே , இந்த மாதம் முழுவதும் என்னுடன் நற்செய்தி ஊழியத்தில் இணைந்ததற்கு நன்றி. வரவிருக்கும் மாதத்தில் கடவுள் உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்களை வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.ஆசீர்வதிக்கப்பட்டிருங்கள் !ஆசீர்வாதத்தில் நிலைத்திருங்கள் !!ஆமென் 🙏.

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து, அவருடைய நன்மையையும் நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தையும் அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *