15-08-23
இன்றைய நாளுக்கான கிருபை !
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV
மேய்ப்பரின் அற்புதமான செயல் இது! ஆடுகளின் இயல்பான போக்கு வழிதவறிச் செல்வது. பின்னடைவு என்பது காலப்போக்கில் நடைபெறுவது அது திடீரென்று நடப்பது அல்ல . உண்மையிலிருந்து விலகிச் செல்வது அந்த நபர் கூட உணராதபடி படிப்படியாக இழுத்துச்செல்லுவதாகும் .
பொதுவாக விண்வெளியில் ராக்கெட் வெடிக்கும்போது, இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்லாது , ஆகவே ,ஒவ்வொரு 8வது வினாடியிலும் ஒரு வழித்திருத்தம் செய்யப்படுகிறது இந்த வழித்திருத்தம் இல்லாமல், விண்வெளி விண்கலம் அதன் இலக்கை (விரும்பிய இலக்கு) அடையாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் இப்படியே நடக்கிறது . ஆனால், இயேசு நம்முடைய உண்மையான மற்றும் நல்ல மேய்ப்பராக இருந்து நம்மை சரியான பாதையில் அல்லது நீதியின் பாதையில் வழிநடத்துகிறார், ஏனென்றால் நாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல, ஆனால் அவருடைய நாமத்தின் நிமித்தமாக நாம் நல் மேய்ப்பரால் நீதியின் பாதையில் வழி நடத்தப் படுகிறோம் .
வேத வசனத்தில் கூறியபடி அவர் நம் ஆத்துமாவை மீட்க்கிறார்’ என்றால் வாழ்வில் வழி விலகிப்போன நம்மை திரும்ப சரியான பாதையில் நடத்துவது என்று பொருள் .உலகத்தின் பொறுப்பகளினாலும் , செல்வத்தின் வஞ்சகத்தினாலும் நமது ஆத்துமா சோதிக்கப்பட்டு நாம் வழி விலகிச் செல்கிறோம். நம்முடைய நல்ல மேய்ப்பராகிய இயேசு நம் வாழ்வில் தலையிட்டு, அவருடைய நாமத்தினிமித்தம் அவருடைய நீதியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறார்.
ஆம், என் பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய நல் மேய்ப்பர் , நம் நீதியாக இருக்கிறார் ( our T’sidkenu) .. “இயேசு என்னோடு இருக்கிறார்,என் நீதியாய் இருக்கிறார், எனவே நான் வழிதவறவும் இல்லை, வெட்கப்படவும் மாட்டேன்”என்று தொடர்ந்து அறிக்கை செய்வோம் . நிச்சயமாக, உங்கள் நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு உங்கள் தேவனாகிய பிதா – விரும்பிய- ஏதிர்காலத்தை நோக்கி உங்களை வழிநடத்துவார். *இயேசுவின் நாமத்தில் சரியான முறையில் ,சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருப்பீர்கள்! . ஆமென் 🙏
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !
கிருபை நற்செய்தி தேவாலயம் .