02-06-23
இன்றைய நாளுக்கான கிருபை !
பிதாவிற்கு பிரியமான இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவருடைய நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள் !
.இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,(II பேதுரு 1:17) NKJV.
கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை எவ்வளவு அன்பாக நேசித்தார் என்பதை நாம் புரிந்துகொண்டால், அவர் நம்மீது வைத்துள்ள அன்பை நாம் உண்மையிலேயே போற்றுவோம்!
கடவுள் நம்மை மிகவும் நேசித்ததால் அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்கு பதிலாக நம் இடத்தில் இறக்கும்படி கொடுத்தார். இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற தம்மையே ஒப்புக்கொடுத்து, நம் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவர அவருக்கு பரிபூரணமாக கீழ்ப்படிந்தார். எனவே,கடவுள் இயேசுவைக் குறித்து மிகவும் மகிந்து அவரில் பிரியமடைந்தார் !
இயேசு தம்மை நமக்காகக் கொடுத்த விதம் பிதாவை மிகவும் பிரியப்படுத்தியது போல, நாமும் இயேசுவை முழு மனதுடன் நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வது பிதாவுக்கு மிகவும் பிரியம் அளிக்கிறது.
இயேசுவின் பலியை நமக்காக உணர்ந்து பெற்றுக் கொள்ளும்போது, நாமும் பிதாவிடமிருந்து அதே சாட்சியைப் பெறுவோம், “இவர் என் அன்பு மகன்/ மகள், இவரில் நான் மிகவும் பிரியமாயிருக்கிறேன்” .
என் அன்பானவர்களே , இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று தந்தையின் நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள். ஆமென் 🙏
பிதாவிற்கு பிரியமான இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவருடைய நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள் !
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்.