மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவர் மனிதனாக செய்த தியாகத்தினால் பூமியில் ஆளுகை செய்கிறோம்!

08-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவர் மனிதனாக செய்த தியாகத்தினால் பூமியில் ஆளுகை செய்கிறோம்!

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே,அந்த ஒருவன்மூலமாய்,மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17 NKJV‬‬

நீதியின் வரம் மற்றும் கிருபையின் மிகுதியைப் பெறும்போது,நாம் வாழ்வில் ஆளுகை செய்கிறோம்,வரம் மற்றும் கிருபையானது இரண்டும் சம்பாதிக்க முடியாதது,உழைக்க முடியாதது மற்றும் நிபந்தனையற்றவை என்பதாகும்.

இது நமக்கு நிபந்தனையற்றது மற்றும் சம்பாதிக்க முடியாதது என்றாலும், கர்த்தராகிய இயேசு தம் உயிரையே விலையாக செலுத்தியதால் தான் நாம் அதை பெற்றுக்கொள்ள முடிந்தது.இதற்காகவே அவர் தேவனாக இருந்து நம்மைப் போல மனிதனாக மாற முடிவு செய்தார்.அவர் பாவம் அறியாதபோதும் பாவம் செய்யாதபோதும் பாவிகளுக்கான ஞானஸ்நானத்திற்கு அடிபணிந்தார் (மத்தேயு 3:6). நாம் வெற்றிபெற அவர் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு தன்னை அனுமதித்து நமக்கு வெற்றியளித்தார்.நமக்காகவே மரிக்க அவர் கல்வாரிக்குச் சென்றார்,ஆகையால் பாவமும் மரணமும் மனிதகுலத்தின் மீது சட்டப்பூர்வமாக உரிமை கோரமுடியாது. அல்லேலூயா!

இவற்றின் சாராம்சம் என்னவென்றால்,தேவனின் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்வதற்கு இயேசுவின் முழுமையான கீழ்ப்படிதல் தேவைப்பட்டது,அந்த தேவனின் கிருபையையும் அவருடைய நீதியாகிய பரிசையும் நம் வாழ்வில் கொண்டு வந்து,நம்மை ஆளுகை செய்ய வைக்கிறது.

என் அன்பானவர்களே, நாம் தேவனிடமிருந்து எல்லாவற்றையும் பெறுகிறோம்,ஏனென்றால் நாம் தகுதியானவர் என்பதால் அல்ல,ஆனால் இயேசு தகுதியானவர் என்ற காரணத்தினால் தான்.அல்லேலூயா! இந்த எண்ணம் நாம் மனதில் கொண்டால் அது தேவனின் பொக்கிஷமான உடைமைகளைத் திறக்கிறது,மனிதனின் வாழ்க்கையில் தகுதியற்ற அனுகூலத்தைப் பொழிகிறது. மேலும் இந்த எண்ணம் உங்களை ஒரு வெற்றியாளரைவிடவும், எப்போதும் தெய்வீகமாகவும், நித்தியமாகவும், தோற்கடிக்கமுடியாதததாகவும், அழியாததாகவும்,பரிசுத்த ஆவியான்வரின் மூலம் எவராலும் வெல்ல முடியாதவராகவும் மாற்றுகிறது!!! ஆமென் !! 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவர் மனிதனாக செய்த தியாகத்தினால் பூமியில் ஆளுகை செய்கிறோம்.

கிருபை நற்செய்தி  !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *