மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் தடைகள் திடீரென்று அகர்வதை அனுபவியுங்கள்!

12-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் தடைகள் திடீரென்று அகர்வதை அனுபவியுங்கள்!

24. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25. தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.யாத்திராகமம் 2:24-25 NKJV

தேவன் அவர்களின் கூக்குரலைக் கேட்டார், தேவன் தனது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார், தேவன் தம் பிள்ளைகளின் வேதனைகளைப் பார்த்த்து அவகைளை தீர்க்கும்படியாக அவர்களை அங்கீகரித்தார். (அவர்களின் அழுகைக்கு பதிலளித்தார்)!

எல்லா கண்டங்களிலிருந்தும் எல்லா நம்பிக்கைகளிலிருந்தும் பரலோகத்தில் உள்ள சர்வவல்லமையுள்ள தேவனிடம் மக்களின் வேதனையான கூக்குரல்கள் வருகின்றன.ஆனால், மனிதனுடனான தேவன் செய்த (இரத்த )உடன்படிக்கையை நினைவுகூரச் செய்யும் பெருமூச்சானது மனிதனைப் பார்க்கவும் அவனுக்கு விரைவாக பதிலளிக்கவும் தேவனுடைய கவனத்தை ஈர்க்கிறது.

என் அன்பானவர்களே, இது ஒரு அற்புதமான உண்மை மற்றும் இந்த உண்மையைப் புரிந்துகொள்வது ஒருவரின் ஜெப வாழ்க்கையில் முற்றிலும் மாற்ற்று கிறது,உடனடி பதில்களைப் பெறுகிறது!
வனாந்தரத்தில் ஆகார் மற்றும் அவளது மகன் இஸ்மவேலின் வாழ்க்கையிலிருந்து ஒரு எளிய உதாரணத்தை தருகிறேன். அவர்கள் தவறான நடத்தைக்காக ஆபிரகாமின் வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர், அவர்கள் பாலைவனத்தில் தண்ணீர் இல்லாமல் தவித்து ஓடினர்,மேலும் ஆகாரால் தனது மகனின் மரணத்தைப் பார்க்க முடியவில்லை.அவள் கசப்புடன் அழுதாள் மற்றும் வேதனையால் அழுதாள், அவள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அழுதாள்.அப்பொழுது,இறக்கும் இளைஞனின் அழுகையை தேவன் கேட்டார் என்று வேதம் கூறுகிறது (ஆதியாகமம் 21:17).என் கற்பனைக்கு எட்டிய வரையில், இறக்கும் தருவாயில் இருந்த இளைஞனின் அழுகை ஒரு உள்ளான குமுறலாகவும் வேதனையை உள்ளடக்கிய கண்ணீராக இருந்திருக்கும்.ஆனால்,தேவன் இறக்கும் இளைஞனின் அந்த குமுறலைகூட கேட்டார்!

என் அன்பானவர்களே, தேவனுக்கு முக்கியமானது சத்தத்தின் தீவிரமோ அல்லது நபரின் அழுகையின் விரக்தியோ அல்ல, மாறாக அவருக்கு முக்கியமானது அவர் மனிதனுடன் செய்த இரத்த உடன்படிக்கையில் இருந்து வருகிற சத்தமே ஆகும். தேவன் ஆபிரகாமுடன் ஒரு இரத்த உடன்படிக்கை செய்தார், மேலும் அவர் ஆபிரகாமின் மகன் இஸ்மவேலையும் ஆசீர்வதிப்பார் என்று ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தார் (ஆதியாகமம் 17:20). இதுவே சிறுவனின் முனகலை தேவனுடைய சிம்மாசனத்தை அடையச் செய்தது!

ஆம் என் அன்பானவர்களே, தேவன் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடன் நித்திய உடன்படிக்கை செய்துள்ளார்.இந்த உடன்படிக்கை அவருடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.இந்த புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ள எவரும் மிகவும் கிருபை பெற்றவர்கள் (HIGHLY FAVOURED) மற்றும் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் (GREATELY BLESSED)!

ஆகவே, இயேசுவின் இரத்தத்தின் மூலம் சாதி, மதம், கலாச்சாரம், நிறம், சமூகம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தேவனிடம் வரும் எவரும் நிச்சயமாக தேவனின் உடனடி கவனத்தையும் அவர்களின் ஜெபங்களுக்கு விரைவான பதிலையும் பெறுவார்கள்! ஆமென் 🙏

இயேசு தம் இரத்தத்தால் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார் (ரோமர் 5:9) மேலும் கிறிஸ்துவில் உங்கள் நீதியின் விசுவாச அறிக்கையானது ஒவ்வொரு நுகத்தையும் உடைத்து, பரிசுத்த ஆவியானவரை உங்கள் வாழ்க்கையில் எதிரிக்கு விரோதமாக படையெடுக்க அழைக்கிறது,ஆகவே இன்றும் உங்கள் வாழ்வில் உள்ள தடைகளை தகர்த்து ஆளுகை செய்யவைக்கிறார். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய இரத்தத்தின் மூலம் தடைகள் திடீரென்று அகர்வதை அனுபவியுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை(பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  −  2  =  2