02-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியால் ஆளுகை செய்யுங்கள்!
6.தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. சங்கீதம் 45:6 NKJV
இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இந்தப் புதிய மாதத்தை நாம் ஆரம்பிக்கும்போது,அவருடைய உறுதியான வாக்குறுதிகள் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் என்ற விசுவாசத்தோடு தொடங்குவோம்.
ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் வாக்குத்தத்தமாக கீழ்வரும் காரியங்களை என் மனதில் தூண்டுகிறார், இந்த மாதம் “தேவையற்ற தாமதங்களை நிறுத்தும் மாதம்“என்று நான் அறிவிக்கிறேன். இந்த மாதம்”மகத்தான மகிழ்ச்சியின் மாதமாக இருக்கும்” அல்லேலூயா!
ஆம் நண்பர்களே! பூமியில் இந்த வாழ்க்கையில் ஆட்சி செய்ய தேவன் நமக்கு திறவுகோல்களை ஏற்படுத்தியுள்ளார். இந்த திறவுகோல்கள் பெறப்பட வேண்டியவை அதை சுய முயற்ச்சியினால் அடையப்படக்கூடாது.
ஆண்டவராகிய இயேசு இன்று மகிமையின் ராஜாவாக வீற்றிருப்பதால், நாமும் அவருடன் வீற்றிருக்கிறோம் மற்றும் என்றென்றும் அரசாளுவதற்கு இந்த கிருபையைப் பெறுகிறோம் என்பதை இந்த மாதத்தின் வாக்குத்தத்த வசனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர் என்றென்றும் ஆட்சி செய்ய தகுதியுடைய நீதியின் செங்கோலைப் பிடித்திருக்கிறார்.கிரேக்க மொழியில் “நீதி” என்ற வார்த்தை “eututés” என்பது “yoo-thoo’-tace” என்று உச்சரிக்கப்படுகிறது. இது புதிய ஏற்பாட்டில் ஒருமுறை மட்டுமே தோன்றுகிறது, அதாவது “சரியாக, நேராக (நிமிர்ந்து), முழுமையான நீதியுடன் – அதாவது விலகல் இல்லாமல்” (தேவையற்ற தாமதம்), “விழுப்பின்றி நேராக” என்று பொருள்படும்.
ஆம் நண்பரே, இயேசு ஒருவரே உங்கள் நீதியாக மாறும்போது, அவர் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு வளைந்த பாதையையும் நேராக்குவது மட்டுமல்லாமல் தாமதத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு விலகலையும் தடை செய்கிறார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த கிருபை இன்று உங்களுக்காக, உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் ஒவ்வொரு தாமதத்தையும் நிறுத்துகிறது மற்றும் தேவனின் வாக்குறுதிகளை இப்போதே நிறைவேற்றுகிறது!
அவருடைய நீதியின் மூலம் செயல்படும் இந்த கிருபை உங்களை என்றென்றும் ஆளுகைசெய்ய வைக்கிறது! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியால் ஆளுகை செய்யுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!