28-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,நன்றியுணர்வுடன் பொங்கி மகிழுங்கள்!
9.அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.II கொரிந்தியர் 12:9 NKJV
உங்கள் உண்மையான பலவீனம் உங்கள் பலவீனம் அல்ல.ஆனால் உங்கள் பலவீனத்தில் அவருடைய பலத்தை உணரத் தவறுவதுதான்.
ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படிய தவறிவிட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை சாப்பிட்டார்கள்.
ஆனால் கீழ்ப்படியாமைக்கு முன்பு அவர்கள் இதயத்தில் அதிருப்தி இருந்தது.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிருபையைப் பெறத் தவறியதற்கு முக்கியக் காரணம் உரிமை பாராட்டுவதுதான்.
இத்தகைய ‘உரிமை பாராட்டுதல்’அல்லது ‘அதிருப்தி’ மேலும் நாம் அனுபவிக்கும் பலவீனம்’ ஆகியவற்றின் அடிப்படைக் காரணம் நன்றியுணர்வு இல்லாமையே.
ஆதாமும் ஏவாளும் தங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களுக்காக அல்லது அனைத்து மரங்களையும் அணுக அனுமதி உள்ளதற்காக தேவனுக்கு நன்றி தெரிவித்திருந்தால்,அவர்கள் அணுக முடியாத ஒரே ஒரு மரத்தின் மீது நாட்டம் காட்டியிருக்க மாட்டார்கள்,தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்க மாட்டார்கள், முழு மனுக்குலத்தையும் சாபத்திலும் மரணத்திலும் மூழ்கடித்திருக்க மாட்டார்கள்.
பலவீனங்கள்,குறைபாடுகள்,ஏமாற்றங்கள் மற்றும் அதிருப்தி போன்றவற்றிலும் கூட தேவனுக்கு நன்றி சொல்வது என்பது எல்லாம் வல்லவரின் வல்லமையை உங்களுக்குள் இருந்து பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது!
உங்களில் உள்ள கிறிஸ்து நன்றி செலுத்துதலின் ஆவியாக இருக்கிறார்,அவர் கிருபையை உங்களுக்குள் நிரம்பி வழியச் செய்கிறார்,கொஞ்சத்தை மிகுதியாகவும்,பலவீனத்தை வலிமையாகவும்,நோயை ஆரோக்கியமாகவும்,துக்கத்தை மகிழ்ச்சியாகவும்,சிதைவு அல்லது சீரழிவை புத்துணர்ச்சியாகவும், இளமையாகவும்,மரணத்தை வாழ்வாகவும் மாற்றுகிறார்.அல்லேலூயா! ஆமென் 🙏
இன்று எல்லாவற்றிற்கும் நன்றியுள்ள இதயத்துடன் மனமார்ந்த நன்றி செலுத்துகிறோம் எங்கள் பரிசுத்த பிதாவே!!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,நன்றியுணர்வுடன் பொங்கி மகிழுங்கள்!
பரிசுத்த பிதாவே,உம்முடைய ராஜ்யம் வருவதாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!