2-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்!
10. யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.) சங்கீதம் 24:10 NKJV
என் அன்பானவர்களே,இந்த ஆண்டின் இறுதி மாதம்டிசம்பர் 2024 தொடங்கும் வேளையில் -நம்மில் பலர் இந்த ஆண்டு ஏற்கனவே போய்விட்டது ஆகவே வரும் 2025 வருடத்திலாவது நல்லது நடக்கும் என்று நம்பி காத்திருக்கிறோம் .ஆனால், இந்த ஆண்டு(2024)ல் தேவன் நமக்குன்டான ஆசீர்வாதத்தை முழுமையாக முடிக்கவில்லை என்பதை நான் தைரியமாக அறிக்கையிடுகிறேன்,அவர் நிச்சயமாக அவருக்கே உரிய பாணியில் ஆசீர்வதிப்பார் ! அல்லேலூயா!! அவர் தேவன்,அவரே மகிமையின் ராஜா!
யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே மகிமையின் ராஜா!
சேனைகளின் கர்த்தர் என்ற வார்த்தை வேதத்தில் 245 முறை தோன்றுகிறது என்பது சுவாரஸ்யமானது. எல்லா குறிப்புகளிலும்,சர்வவல்லமையுள்ள தேவன் நம் போர்களை தேவன்,தம் போராக ஏற்று போராடுவதைக் காண்கிறோம்: பலவீனமானவர்களுக்கு அவர் பலம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர் வழக்காடுபவர், ஏழைகளுக்கு அவர் வள்ளல், நோயுற்றவர்களுக்கு அவர் ஆரோக்கியமாகவும், இறந்தவர்களுக்கு ஜீவனாகவும் இருக்கிறார். அவர் மூடப்பட்ட எல்லா கதவுகளைத் திறக்கிறார், எந்த மனிதனும் திறக்க முடியாமல் போன கதவுகளையும் மூடுகிறார்.
சாமுவேல் என்று அழைக்கப்படும் எல்லா காலத்திலும் மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவரானவரின் தாய் அன்னாளின் வாழ்க்கையில் அவளுடைய கர்ப்பப்பை மீளமுடியாமல் மூடியிருந்தது, ஆனால் சேனைகளின் கர்த்தர் அதைத் திறந்தார். முதன்முறையாக, வேதத்தில், சேனைகளின் கர்த்தர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்த சம்பவத்தில் தான்.
என் அன்பானவர்களே, அன்னாளின் தேவன், சேனைகளின் கர்த்தர், உங்கள் போர்களை தம் போராக ஏற்று போராடி உங்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் இன்றே நிறைவேற்றுகிறார்! ஆமென் 🙏
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்.
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!