மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் ஆளுகை செய்வதற்கான அவரது ஆற்றலைத் தட்டியெழுப்ப அறிவொளி பெறுங்கள்!

13-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் ஆளுகை செய்வதற்கான அவரது ஆற்றலைத்
தட்டியெழுப்ப அறிவொளி பெறுங்கள்!

8. நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
9. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான். மத்தேயு 8:8-9 NKJV.

தன் ஆன்மீக நிலையைப் பொருட்படுத்தாமல் தேவனை உண்மையாக புரிந்துகொள்பவர்களுக்கு தேவனின் வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது அல்லது செயல்படுத்தப்படுகிறது.
தேவனைப் பற்றிய அறிவில் நாம் ஆன்மீக ரீதியில் வளர வேண்டியது இன்றியமையாததாக இருந்தாலும், இன்று அவருடைய வல்லமையை அனுபவிப்பதற்கு என்னுடைய தற்போதைய ஆன்மீக நிலை என்ன என்பது முக்கியமல்ல.

தேவன் நாம் யார் என்பதை அடிப்படையாகக் கொண்டு அற்புதங்களைச் செய்வதில்லை,மாறாக அவர் யார் என்பதைப் பற்றிய நமது புரிதலின் அடிப்படையில் தான் அவர் அற்புதங்களைச் செய்கிறார்!
பல சமயங்களில் நாம் ஆன்மீக ரீதியில் போதுமான அளவு வளரவில்லை அல்லது நாம் அவருடன் நெருக்கமாக இல்லை என்று நினைப்பதால் அவருடைய வல்லமையை பெற்றுகொள்ளத் தவறுகிறோம்.

நம் மீது கவனம் செலுத்துவதை விட தேவன் மீது கவனம் செலுத்துவது அவசியம் – அவருடைய தாராள மனப்பான்மை, அவரது அன்பு, அவரது கிருபை,அவரது மகத்துவம் மற்றும் அவரது வல்லமை ஆகியவைப் பற்றிய அறிவு நமக்கு முக்கியம்

தான் ஒரு புறஜாதி மற்றும் தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற தகுதியற்றவர் என்பதை நூற்றுக்கதிபதி அறிந்திருந்தார்.ஆனால்,இஸ்ரவேலருக்கு உடன்படிக்கை தேவனாக இருந்தாலும்,எல்லா படைப்புகளுக்கும் இயேசுவே ராஜா என்பதை அவர் புரிந்துகொண்டார். அவர் தனது(நூற்றுக்கதிபதியின்) நிலை அல்லது நல்ல பணியின் அடிப்படையில் அணுகவில்லை அல்லது இஸ்ரவேலுக்காக பிரத்தியேகமான யெகோவா (YAHWEH) உடன்படிக்கைப் பெயரைப் பயன்படுத்தவில்லை.
மாறாக,அவர் உட்பட அனைவரையும் உள்ளடக்கிய அனைத்து படைப்புகளின் மீதும் இயேசுவின் இறையாண்மை மற்றும் அவரது மாட்சிமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர் வெறுமனே அவரிடம் வந்தார்

என் அன்பானவர்களே, இன்று நீங்களும் அவருடைய எல்லையற்ற வல்லமையைப் பெற்று ,உங்கள் வாழ்க்கையில் அழுத்துகின்ற ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முடியும்,எல்லா மனிதர்களுக்கும் இயேசுவே ராஜா என்று நம்புங்கள் இந்த அறிவொளியின் மூலம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆமென் 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் ஆளுகை செய்வதற்கான அவரது ஆற்றலைத்
தட்டியெழுப்ப அறிவொளி பெறுங்கள்

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *