05-01-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.ரோமர் 5:17 (NKJV )
என் அன்பு நண்பர்களே,நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலம் ஆளுகை செய்யவில்லை என்றால்,மரணம் ஆளுகை செய்யும். இது கேட்பதற்கு கடினமாக தோன்றலாம்,ஆனால் இதுதான் கசப்பான உண்மை.
நாம் வேகமாக வயதாகி,உடலின் சீரழிவு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும், இதன் விளைவாக இயல்பான ஆயுட்காலத்தை விட வேகமாக மரணம் ஏற்படுகிறது.
இருப்பினும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு மரணம் அவர்களுடைய பங்கு அல்ல.நாம் வயதாவதை தடுக்க முகத்தில் கிரீம் பூசுவது,ஒரு குறிப்பிட்ட உணவு உண்பது அல்லது சில உடற்பயிற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துவதிலில்லை மாறாக நம்முடைய முழு நோக்கமும் பிதாவின் வலது பாரிசத்தில் சிம்மாசனத்தில் கம்பிரமாக உட்கார்ந்திருக்கும் மகிமையின் ராஜாவாகிய இயேசு மீது இருக்க வேண்டும்.
மகிமையின் ராஜாவைப் பார்க்கவும் சந்திக்கவும் நீங்கள் முற்படும்போது,அவருடைய மகிமை உங்களையும் அவருடைய விலைமதிப்பற்ற வார்த்தையையும் மகிமைப்படுத்தும் – “அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே நாமும் இவ்வுலகில் இருக்கிறோம்” (1 யோவான் 4:17 b).
ஆம், இது உங்கள் வாழ்க்கையில் உண்மையாக நிகழும்.
மகிமையின் ராஜாவை சந்தித்து ராஜாக்களாக அரியணை அமறுங்கள்! ஆமென் ! 🙏.
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.