மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

08-01-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

6. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
7. நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.ஆதியாகமம் 4:6-7 NKJV.
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.யோவான் 1:29 NKJV

என் அன்பு நண்பர்களே, இந்த ஆண்டின் 2 வது வாரத்தைத் தொடங்கும் போது, ​​உங்களை அச்சுறுத்த முயற்சிக்கும் சக்திகளின் மீது நீங்கள் ஆட்சி செய்வீர்கள் என்று நான் உங்கள் மீது தீர்க்கதரிசனம் உரைக்கிறேன் .
ஆம்,என் அன்பானவர்களே,இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு! தேவனின் மகிமை உங்கள் மீது இறங்கி, உங்களில் தங்கும்.அதனால்,உங்கள் வழியில் வரும் ஒவ்வொரு தடையையும் நீங்கள் இயேசுவின் நாமத்தில் ஆளுகை செய்வீர்கள். ஆமென் !

ஏழைகளுக்கு உதவுவது அல்லது நமது தாலந்துகளைக் கொடுப்பது போன்றவற்றின் மூலம் நாம் அனைவரும் ஏதோ ஒரு வடிவத்தில் தேவனைப் பிரியப்படுத்த விரும்புகிறோம்.
ஆனால்,நாம் தாலந்துகளைக் கொடுப்பதற்கு முன்பாக நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.ஏனென்றால்,நாம் பாவத்தை ஆள வேண்டும்.ஆட்சி செய்வதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் நமது பாவத்தை முதலில் தீர்க்க தேவன் விரும்புகிறார்.

இது தான் காயீனுக்கு தேவன் கொடுத்த அறிவுரை.காயீன் தன் திறமைகளின் மூலம் தேவனைப் பிரியப்படுத்த விரும்பினான்.ஆனால்,தேவன் அவனது பாவத்தை முதலில் தீர்க்க விரும்பினார்.
தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை – தேவ ஆட்டுக்குட்டியாகிய நமக்குப் பாவத்தைச் சுமப்பவராகக் கொடுத்தார்.

இயேசுவை நம்புங்கள்,உங்கள் பாவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவனின் தீர்வாகிய அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்,இதன் மூலம் நீங்கள் உண்மையான ஆளுமையைப் பெறலாம் மற்றும் வாழ்க்கையில் ஆட்சி செய்யலாம்.
ஆம்,இயேசுவின் மரணம் பாவியாகிய நம்மை நீதியாக அறிவிக்கப்படுவதற்கு இடைபடுகிறது,ஆகையால் வாழ்வில் ஆட்சி செய்வதற்கு நாம் கிறிஸ்து இயேசுவில் தேவ நீதி என்று ஒப்புக்கொண்டு அறிக்கையிடவேண்டும்!ஆமென் ! 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *