09-01-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35. அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார்.
36. ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.யோவான் 8:34-36 NKJV
அடிமைகள் ஆட்சி செய்வதில்லை.எஜமானர்கள் மட்டுமே ஆட்சி செய்கிறார்கள்.
தவம் செய்வதன் மூலமோ அல்லது ஏழைகளுக்கு தானம் செய்வதன் மூலமோ நீங்கள் பாவம் அல்லது பாவ பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட மாட்டீர்கள்,இந்த செயல்கள் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றிருந்தாலும் பாவத்திலிருந்து விடுதலை செய்ய முடியாது.பாவத்தை மேற்கொள்வது என்பது தேவனின் குமாரனை அணுகுவதின் மூலமே வருகிறது.ஏனென்றால், இயேசு ஒருவரே உலகத்தின் பாவத்தை நிவிர்த்தி செய்கிற ஜீவாதார பலியானார்.
தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவுடனான ஒரு சந்திப்பு – உங்களை எந்த வகையான பாவத்திலிருந்தும் விடுவிக்கச்செய்கிறது,நீங்கள் எவ்வளவு காலம் அதில் சிக்கியிருந்தாலும் சரி அதிலிருந்து பூரண விடுதலையைத் தருவார்.மகிமையின் ராஜாவாகிய இயேசுவுடனான ஒரு சந்திப்பு உங்களை பாவத்தின் மீது எஜமானராக ஆக்குகிறது மற்றும் வாழ்வில் ஆளுகை செய்ய உதவுகிறது.
பரலோகத்தில் உள்ள எங்கள் பரம பிதாவே! இரட்சகராகிய இயேசுவையும், கர்த்தராகிய இயேசுவையும், மகிமையின் ராஜாவாகிய இயேசுவையும் வெளிப்படுத்துங்கள்.என்னை மறுரூபமடையச்செய்து,இயேசுவின் நாமத்தில் என்னை வாழ்வில் ஆளுகை செய்ய அருளுவீராக !ஆமென் ! 🙏.
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.