15-04-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்!
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.ரோமர் 5:17NKJV.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியானது உங்களை வெற்றியடையச் செய்து,எப்போதும் உங்களை சாதனையாளராக்குவதாகும்.தேவன் இயேசுவை மேன்மைப்படுத்தினார்,மேலும் எல்லா நாமத்திற்க்கும் மேலான ஒரு நாமத்தை அவருக்கு கொடுத்தார்,அதனால் நீங்களும் நானும் இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் மேற்கொண்டு ஆளுகை செய்யலாம்.
சில காரணங்களுக்காக,நாம் பரலோகத்திற்கு செல்லும்போது தான் நமது வாழ்வில் வெற்றி வரும் என்று நினைக்கிறோம்.நிச்சயமாக நாம் பரலோகத்தில் அரசாளுவோம்.ஆனால்,பரலோகம்-போட்டி,எதிர்ப்பு, பாவம்,நோய், வறுமை, மரணம் இல்லாத இடம் அப்படியானால் நாம் பரலோகத்தில் எதை மேற்கொண்டு ஆளுகை செய்வது ?
என் அன்பான நண்பர்களே,மேலே கூறிய அனைத்து எதிர்ப்புகளும் இருக்கும் இடம் பூமி.ஆகவே உங்களை எதிர்க்கும் இந்த வாழ்க்கையில் மேற்கொண்டு நீங்கள் ஆளுகை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். கிருபையின் மிகுதியையும் அவருடைய நீதியின் வரத்தையும் நீங்கள் பெறும்போது இந்த ஆளுகை சாத்தியமாகும். அல்லேலூயா!
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி நம்முடைய பாவங்கள்,சாபங்கள்,வியாதிகள்,வறுமை மற்றும் மரணம் ஆகியவற்றை நமக்காக தம்மீது பெற்றார்.ஆனால் அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை, அதுபோலவே நாம் ஒருபோதும் நீதியை செய்யவில்லை என்றாலும்,அவருடைய நீதியைஇலவசமாகப் பெறுகிறோம்.
“கர்த்தாவே,உமது பரிசுத்தமான நீதியையும் கிருபையின் மிகுதியையும் நான் பெறுகிறேன்” என்ற வார்த்தையைப் பேசுவதன் மூலம் நாங்கள் பெறுகிறோம்.
இதை நாம் ஒவ்வொரு நாளும் அடிக்கடி சொல்ல வேண்டும்,அதனால் நாம் அவருடைய நீதியை உணர்ந்து, வெற்றியோடு வாழலாம்.ஏனென்றால் இந்த உலகில் நாம் சந்திக்கிற ஒவ்வொரு எதிர்ப்பையும் நம் வாழ்வில் மேற்கொள்ளச்செய்கிறது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இந்த வாரம் நீங்கள் ஆண்டவராகிய இயேசுவின் நீதியைப் பெற்று வாழ்வில் எல்லாவற்றையும் மேற்கொண்டு ஆளுவீர்கள்.ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்!
கிருபை நற்செய்தி தேவாலயம்!