மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்!

18-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்!

3. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
4. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
5. ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். ரோமர் 4:3-5 NKJV.

தேவன் நம் தந்தை ஆபிரகாமுக்குப் பிரசங்கித்த நற்செய்திதான் இன்று நமக்குப் பிரசங்கிக்கப்படுகிறது (கலாத்தியர் 3:8).இந்த சுவிசேஷம் விசுவாசத்தினால் வரும் நீதி.அதாவது -விசுவாசம் மூலமே தேவநீதி வருகிறது நம் கிரியை மூலம் அல்ல.
உலகில் எல்லா மதங்களுக்கும் உள்ள ஒரே கோட்பாடானது,தேவன் பக்கிதியற்றவர்களை அநீதியானவர்களாக நியாயந்தீர்க்கிறார்,மற்றும் தேவ பக்தியுள்ளவர்களை நீதிமான்களாக கருதி ஆசீர்வதிக்கிறார்.
ஆனால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி மட்டுமே தேவன் அநீதியானவர்களை நியாயப்படுத்துகிறார் என்று அறிவிக்கிறது.இதைத்தான் ஆபிரகாம் கேட்டு விசுவாசித்தார்,அந்த விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. அல்லேலூயா!

தேவனின் சொந்த மதிப்பீட்டில்,நீதிமான்கள் யாரும் இல்லை,ஒருவர் கூட இல்லை (ரோமர் 3:9,10). அப்படியானால்,தேவன் அநீதியானவர்களை நீதிமான்களாக்கினார் என்றால்,அவர் அநீதியானவரை தண்டிக்காமல் விட்டுவிடுகிறாரா ?இல்லை! ஒருபோதும் இல்லை!! அவருடைய நீதி மற்றும் பரிசுத்தம்,தேவனின் தரநிலை உயர்ந்ததாகவே இன்றும் இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த தரமாகும். இருப்பினும்,அவர் அநீதியானவர்களின் அனைத்து பாவங்களையும் இயேசுவின் உடலில் சுமத்தினார்,அதன்படி நம்முடைய பாவங்களுக்காக அவரைத் தண்டித்தார். நியாயத்தீர்ப்பின் சட்டத்தின்படி,எந்தவொரு குற்றமும் ஒரு முறை மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்,அது கர்த்தராகிய இயேசுவின் உடலில் வந்தது,மேலும் நாம் அனைவரும் விடுவிக்கப்பட்டு நீதியின் அடிப்படையில் அதாவது சட்ட அடிப்படையில் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம்.பாவியை நீதிமான்களாக்குவதில் தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார்.இதுவே உண்மையான நற்செய்தி! அல்லேலூயா!!

என் பிரியமானவர்களே,நீங்கள் தேவனை அறிவதில் உண்மையுள்ளவர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் பல சமயங்களில் நீங்கள் தேவனின் பரிசுத்தத்தின் தரத்திற்கு ஏற்ப வாழத் தவறுகிறீர்கள்!கலங்காதிருங்கள்! உங்கள் இதயம் உங்களைக் குற்றப்படுத்த வேண்டாம்,ஏனென்றால் தேவன் உங்களைக் குற்றப்படுத்துவதில்லை குறிப்பாக ,நீங்கள் தோல்வியடையும் போது தேவன் பாவிகளை நீதிமான்களாக்குகிறார் என்ற நற்செய்தியை ஒப்புக்கொண்டு அறிக்கைசெய்யுங்கள்,விரைவில் அக்ஷணமே நீங்கள் தேவ நீதியின் வெகுமதியை அனுபவிப்பீர்கள்,அது பாவத்தின் நாட்டத்தை விரட்டியடித்து,தேவனின் வகையான நீதியின் அம்சத்தில் நீங்கள் ஆளுகை செய்யத் தொடங்குவீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *