11-01-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
14. மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.(ரோமர்கள் 8:14, 16-17)
நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவருக்கு நாம் கீழ்ப்படிவதில் ஆளுகை செய்வதற்கான வல்லமை உள்ளது.அந்த அதிகாரத்துடன் பொறுப்பும் வருகிறது.பொறுப்பேற்பது நமது முதிர்ச்சியைக் காட்டுகிறது. பொறுப்பை இன்னொருவருக்கு மாற்றுவது ஒருவரின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது.
பொறுப்புள்ள மகன் என்பது முதிர்ச்சியடைந்த மகன்,அவன் சரியானதையும் தவறையும் பகுத்தறியத் தெரிந்தவன். இந்த காரணத்திற்காகவே தான், சாலொமோன் ராஜா திறம்பட ஆட்சி செய்ய ஒரு புரிந்துகொள்ளும் இதயத்தை கேட்டார்.
பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் வாழ்க்கை முறை மட்டுமே வாழ்க்கையில் ஆளுகை செய்ய ஒரே வழியாகும்.அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார்,எல்லா உண்மையிலும் உங்களை வழிநடத்துவார்.
பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும்போது, நீங்கள் பிறர் பேசும்போது கூர்ந்து கவனிக்கும்படியாக மாறுவீர்கள்.
ஒரு நீதிமன்ற அறையில்,குறைவாகப் பேசுபவரே நீதிபதி மற்றும் அவர் மிகவும் உள்நோக்கத்துடன் கேட்பவராக இருக்கிறார். இதைத்தான் சாலமன் ராஜா நாடினார் – கேட்கும் இதயம், சரியானதை மட்டுமே கேட்கும், புரிந்துகொண்டு, பேசும் இதயம். ஆளுகை செய்வதற்கு இதுவே திறவுகோல்! ஆமென் 🙏
பரிசுத்த பிதாவே,கேட்கும் இருதயத்தை எனக்குத் தந்தருளும்.பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட என் வாழ்க்கையை நான் ஒப்புக்கொடுக்கிறேன் அதை தயவோடு அருளுவீராக! ஆமென் ! 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.