29-04-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய நீதி உங்களுக்குள் வருவதால் வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!
5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.லூக்கா 19:5, 9-10 NKJV.
சகேயு என்பவர் பணம் சம்பாதிப்பதற்காக நெறிமுறையற்ற மற்றும் நேர்மையற்ற நடைமுறைகளுக்குப் பெயர் போனவர்.மேலும் தலைமை வரி வசூலிப்பவராக இருந்ததால்,அநீதியாக செல்வத்தை குவித்ததால் மக்கள் அவரை வெறுத்தனர்.அவரது வீடு அனைத்து தெய்வபக்தியற்ற மற்றும் பாவ நடவடிக்கைகளால் நிறைந்த திருடர்களின் குகையாக பார்க்கப்பட்டது.
இயேசு அவருடைய வாழ்க்கையிலும் அவருடைய வீட்டிலும் நுழைந்தார்,சகேயுவைப் பற்றிய அனைத்து குறைபாடுகளும் முற்றிலும் மாறிவிட்டன.சகேயு என்ற மனிதன் மகிமையின் ராஜாவை சந்தித்தான் அதன்மூலம்,அவன் வாழ்க்கை மறுரூபமடைந்தது.
தேவனின் கிருபை இந்த தொலைந்து போன மனிதனை தேடிக் கண்டுபிடித்தது,தேவ நீதி அவனது வாழ்க்கையைச் சரியாக்கியது!
ஆம் என் அன்பானவர்களே, இந்த வாரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கை, உங்கள் வணிகம், உங்கள் தொழில், உங்கள் வீடு மற்றும் உங்கள் குடும்பத்தில் அடியெடுத்து வைக்கிறார்.அவருடைய கிருபை உங்களைக் தேடிக் கண்டுபிடிக்கும்,அவருடைய நீதியானது கோணலான பாதைகளை நேராக்குகிறது.நீங்கள் மீண்டும் பழைய வாழ்க்கையில் இருக்க மாட்டிர்கள்.அற்புதத்திற்கு தயாராய் இருங்கள்! இப்போது உங்கள் குறைபாடுகள் உங்களுக்கு சாதகமாக மாறுகிறது! அல்லேலூயா!ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தியுங்கள்,அவருடைய நீதி உங்களுக்குள் வருவதால் வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!