மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

img_200

10-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; கொலோசெயர் 2:14 NKJV

இயேசு சிலுவையில் மனிதனுக்குத் தகுதியான மரணம் உட்பட அனைத்து தண்டனையையும் ஏற்றுக்கொண்டபோது,நியாயப்பிரமாணத்தின் தீவிர கோரிக்கைகளை அவரது சொந்த உடலில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் தேவைகள் ஒரு திவாலான மனிதனிடமிருந்து நீதியைக் கோரியது. ஆனால், பெலனற்ற அவல நிலையில் இருந்த மனிதனுக்கு தண்டனையும் அனுபவிக்க வேண்டிய நிலை இருந்தது.நமது ரட்சகராகிய கிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் ஏற்பட வேண்டிய தீர்ப்பையும், தண்டனையையும் ஏற்ற்றுக்கொண்டு முழுமையாக சுமந்து தீர்த்தார் .

இயேசு கிறிஸ்து தான் நியாயப்பிரமாணத்தின் நிறைவாக இருக்கிறார்.விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நீதிக்கான நியாயப்பிரமாணத்தின் முடிவாக கிறிஸ்துவே இருக்கிறார் (ரோமர் 10:4). மனிதன் குற்றத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுவிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல்,மனிதன் நீதிமானாக அறிவிக்கப்படுகிறான் (அவன் பாவம் செய்யாதது போலவே). அல்லேலூயா!

என் அன்பானவர்களே, தேவனின் பார்வையில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கு காரணம்,உங்களால் செயல்பட முடியவில்லை என்பதல்ல,ஆனால்,கடந்த வாழ்வில் நடந்த குற்றங்களினால் குற்ற உணர்வுகளும்,எதிர்காலத்தில் தோல்வி ஏற்படும் என்ற பயமும் உங்களைச் செயல்படவிடாமல் தடுக்கிறது.

இன்று,அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு (கிறிஸ்து) எல்லா குற்றங்களையும் துடைத்து,எல்லா பயத்தையும் உங்கள் வாழ்க்கையிலிருந்து என்றென்றும் விரட்டுகிறார்.அவர் உங்கள் வலது கையைப் பிடித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றியை அடையச் செய்கிறார், ஏனென்றால் அவர் சிலுவையின் மரணத்தின் போது நமக்கு எதிராக நிற்கும் ஒவ்வொரு எதிர் சக்தியையும் அடக்கினார்,ஆண்டு கொண்டார்.

இயேசு கிறிஸ்துவே என் நீதி (Jehovah T’sidkenu) என்று நீங்கள் கூறும்போது , பாவம் அல்லது நோய், பயம் அல்லது அவமானம் என ஒவ்வொரு அடிமைத்தனத்தையும் உடைக்கும் அபிஷேகத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.உங்களுக்குத் தகுதியான தண்டனை அனைத்தையும் இயேசு சுமந்ததால்,அவருடைய கீழ்ப்படிதலின் மூலம் அவருக்குத் தகுதியான அனைத்தையும் நீங்கள் நிச்சயமாக அறுவடை செய்வீர்கள். இன்று, நீங்கள் சுதந்திரமாக மட்டுமல்ல, நீங்கள் ஆளுகையும் செய்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *