மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

15-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

தேவனின் மகிமை உங்கள் மீது உதித்தது என்பது அவருடைய வெளிப்பாட்டின் பிரகாசத்தை குறிக்கிறது.

இயேசுவே உலகத்தின் ஒளி!அவர் தேவனின் மகிமையின் பிரகாசமாகவும்,சர்வவல்லமையுள்ள கடவுளின் வெளிப்படையான உருவமாகவும் இருக்கிறார்.அவர் தான் மனிதகுலத்திற்கு கடவுளின் இறுதி வெளிப்பாடு. (எபிரேயர் 1:3) இயேசுவே உங்கள் ஒவ்வொரு தேவைக்கும் பதில், அதாவது தேவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தை – (RHEMA WORD) உங்களை எழும்பி பிரகாசிக்கச் செய்கிறது.அதுவே விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.(ரோமர் 10:17)என்று எழுதப்பட்டுள்ளது. ஆம், கிறிஸ்துவின் ஒரு வார்த்தை உங்கள் எல்லா பிரச்சனைகளையும் முதலும்,கடைசியுமாய் முடிவுக்கு கொண்டுவரும்.

அவருடைய வார்த்தை வரும்போது,தேவனுடைய மகிமை வெளிப்படும்.இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,மகிமை என்பது தேவனின் வெளிப்படுதல்!தேவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார். மக்களால் உணர முடியாவிட்டாலும்,பார்க்க முடியாவிட்டாலும் அவர் எங்கும் நிறைந்தவர். இருப்பினும், இயேசுவானவர் வெளிப்படும்போது நம் புலன்கள் உணரும்படி வெளிப்படுவார் அதுவே மகிமை!.
இது நடக்க,முதலில் தேவநீதி வெளிப்பட வேண்டும். அதுவே சங்கீதம் 85:13ல்“ நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது .
அவருடைய நீதி முன்னே போவதாக எழுதப்பட்டுள்ளது: ஆம்,அது மகிமைக்கு முன் செல்கிறது,பிறகு எல்லா மக்களும் பார்த்து விசுவாசிக்கும்படியாக தேவனுடைய மகிமை அவருடைய நீதிக்குப் பின் வெளிப்படுகிறது.

என் அன்பானவர்களே, இந்த நாளில் அவருடைய மகிமை உங்கள் மீது காணப்படும்,அது அனைவருக்கும் தெரியும் மற்றும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். ஆமென் 🙏
அவருடைய நீதியைத் தேடுங்கள்,அப்பொழுது மற்றவைகள் எல்லாமே உங்களைத் தேடி வரும்! இயேசுவின் கீழ்ப்படிதல்தான் உங்கள் வாழ்வில் அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் என்றென்றும் முத்திரையிட்டது. இயேசுவின் பாவமில்லாத கீழ்ப்படிதலின் காரணமாக நீங்கள் பெற வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்று கர்த்தரிடம் சொல்லுங்கள், ஏனென்றால் இயேசு உங்களுக்கும் எனக்கும் தகுதியான அனைத்தையும் (தண்டனையை) பெற்றார்.இந்நாளில் அவருடைய நீதி உங்களுக்கு முன்பாகச் சென்று அவருடைய மகிமையையும் அவருடைய வெற்றியையும் நீங்கள் அனுபவிக்க வழி செய்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *