22-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்!
3. சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. யோவான் 21:3 NKJV
இயேசுகிறிஸ்துவின் மரணமானது அவருடைய சீஷர்களின் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. இருப்பினும், தேவனின் ஆவி இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் (ரோமர் 8:11), அந்த காரியம் இயேசுவின் சீஷர்களின் ஊக்கம் இழந்த இதயங்களை உயிர்ப்பித்தது.
ஆனாலும், கர்த்தராகிய இயேசு விரைவில் உயர்ந்த வானத்திற்கு பரமேறுவார் என்ற எண்ணமே அவர்களை வருத்தமடையச் செய்தது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக இயேசு கிறிஸ்துவின் சரீர பிரசன்னம் அவர்களை முற்றிலும் கவலையற்ற மற்றும் மன அழுத்தமின்றி வைத்திருந்தது.ஆனால் இப்போது, அவர்களின் எஜமானர் பரமேறியதால் அவர்கள் மனமுடைந்து, அவர்கள் தங்கள் பழைய தொழிலுக்கு (மீன்பிடித்தல்) திரும்பலாம் என்று நினைத்தார்கள், மேலும் தங்கள் சொந்த வேலையை மாத்திரம் பார்ப்போம் என்றிருந்தார்கள்.
அதிகப்படியான ஆன்மீகம் தங்களைத் தடுமாறச் செய்யும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம், எனவே அவர்கள் உலகத்தை மாற்றுவதற்கும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டவர்கள் என்பதை அறியாமல்,தங்கள் சொந்த வழிகளில் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்ள நினைத்திருக்கலாம்.
பரிசுத்த ஆவியின் வருகையே இதை உண்டாக்கியது!
என் அன்பானவர்களே, நீங்கள் சோர்வோடு காணப்படுகிறீர்களா? நீங்கள் பல வருடங்களை வீணடித்துவிட்டீர்கள் என்றும் உங்கள் வாழ்க்கை பயனற்றது என்றும் உணர்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள்,மகிழ்ச்சியாக இருங்கள்! பரிசுத்த ஆவியானவர் எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும். அவர் உங்கள் எல்லா இழப்புகளையும் மீட்டெடுப்பார், மேலும் உங்கள் சமகாலத்தவர்கள் அனைவரையும் விட உங்களை உயர்த்துவார், மேலும் உங்கள் வாழ்க்கையை அழித்த ஒவ்வொரு எதிர்மறை சக்தியின் மீதும் ஆளுகை செய்வார். பரிசுத்த ஆவியானவர் உங்களை இயேசுவின் நாமத்தில் பூமியில் ஆளுகை செய்ய உதவுகிறார்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!
கிருபை நற்செய்தி பேராலயம் !