05-03-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவும்,இரட்சிப்பின் தேவனுமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு களிகூருங்கள்!
9. சீயோன் குமாரத்தியே,மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே,கெம்பீரி; இதோ,உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்;அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.சகரியா 9:9
சகரியா தீர்க்கதரிசி உரைத்தது ,ஆண்டவராகிய இயேசு எருசலேமுக்குள் ஒரு கழுதையின் மீது அமர்ந்து வந்தபோது நிறைவேறியது.அது ஒரு- வெற்றிப் பிரவேசம்! ( மத்தேயு 21:4,5,9).
கம்பீரமான குதிரையின் மீது அல்ல,ஒரு கழுதை குட்டியின் மீது அமர்ந்து வந்த தங்கள் ராஜாவின் வருகையைப் பார்த்து மக்கள் ஆரவாரம் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு அந்நியருக்கு இது மிகவும் வித்தியாசமாகவும் அபத்தமாகவும் தோன்றலாம்,ஏனெனில் நியாயமாகப் பேசினால் ராஜாக்கள் குதிரையில் தான் சவாரி செய்வார்கள்,கழுதையின் மீது அல்ல.
என் அன்பானவர்களே, அதுபோலவே இன்று நமது இயற்கையான கண்கள் மனித கண்ணோட்டத்தில் பார்க்கின்றன,ஆனால் தேவனின் கண்ணோட்டத்தில் அல்ல.நாம் விசுவாசிப்பதற்கு நியாயமான அடையாளங்களைத் தேடலாம்,ஆனால்,காணாதவைகளை நம்பி விசுவாசிக்கிறவர்களே பாக்கியவான்கள் (யோவான் 20:29)என்று கூறப்பட்டுள்ளது .
நமது அற்புதத்தைப் பார்த்த பிறகு தேவனுக்கு நன்றி சொல்வது உண்மையான வேததின்படி விசுவாசம் அல்ல,நம் ஆசைகள் நிறைவேறும் முன் அவரைப் புகழ்ந்து தேவனுக்கு நன்றி கூறுவதே விசுவாசம். அது தேவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இதைத்தான் இந்த மாதத்தில் செய்ய பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்குவிக்கிறார்,”மகிழ்ச்சியோடிருங்கள் ” மற்றும் “அவருடைய மகிமையில் களிகூருங்கள்”.கர்த்தருடைய மகிழ்ச்சி இன்று உங்கள் பலமாக இருக்கட்டும் (நெஹ் 8:10). அல்லேலூயா! ஆமென் 🙏
என் அன்பானவர்களே,நமது மனதின் வேண்டுதல்கள் மற்றும் அற்புதத்தைப் பார்ப்பதற்கு முன்பே தேவனைப் போற்றி நன்றி சொல்லுங்கள். காத்திருக்கும் வேளையில் பலமான சந்தேகங்களையும்,பயத்தையும் நாம் சந்திக்க நேரிடலாம்.”நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி” என்று அறிக்கையிடுங்கள்.இடைவிடாத அறிக்கையின்மூலம் அனைத்து எதிர்மறை எண்ணங்களையும்,அச்சங்களையும் விரட்டி,இரட்சிப்பின் தேவனை உண்மையாக விசுவாசிப்பதற்கு உங்கள் இருதயத்தில் உறுதி பெறுங்கள்!ஆமென் 🙏.
மகிமையின் ராஜாவும்,இரட்சிப்பின் தேவனுமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு களிகூருங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்!