20-02-24
இன்றைய நாளுக்கான கிருபை!
வாழ்வில் விரக்தியின் மத்தியில் மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் இலக்கை அடைய உயர்த்தப்படுங்கள்!
27. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;
28. ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
29. உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.மாற்கு 5:27-29 NKJV.
விரக்தி என்பது மாறுவேடத்தில் வரும் ஒரு ஆசீர்வாதம்,அதை சரியான அணுகுமுறையுடன் கையாளும் போது, உங்கள் இலக்கிற்கு அது உங்களை அழைத்துச் செல்லும்!
வாழ்க்கை உங்களுக்கு உங்கள் தகுதியை விட அதிகமாக வழங்காதபோது,இந்த வாழ்க்கை உங்களை நம்பிக்கையில்லா விளிம்பிற்க்கு தள்ளும்.புத்திசாலித்தனம்,செல்வம்,மக்கள் செல்வாக்கு,கல்வி சாதனைகள் மற்றும் அனுபவங்கள் நீங்கள் விரும்பிய இலக்கை அடைய உதவாத போது மற்றும் உங்கள் உள்மனதின் ஆசை அல்லது இன்றியமையாத தேவைகள் நிறைவேறாதபோது,நீங்கள் அவநம்பிக்கையும் ,விரக்தியும் அடைகிறீர்கள்.உங்கள் எதிர்காலம் உங்களுக்கு இருண்டதாகவும்,என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையற்றதாகவும் இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தீர்கள் ஆனால் பயனில்லை.
அப்படிப்பட்ட சமயங்களில்,நெருங்க முடியாத வெளிச்சத்தில் இருக்கும் பரலோகத்தில் உள்ள பெரிய தேவன் உங்களோடு இடைப்படுகிறார்.உங்கள் துக்கத்தை சொல்ல முடியாத மகிழ்ச்சியாகவும் மகிமை நிறைந்ததாகவும்,உங்கள் நோயை ஆரோக்கியமாகவும் இயேசு மாற்றுகிறார்.அப்பொழுது நம் வாழ்வில் நிறைவேறாத கனவுகள் மற்றும் ஆசைகள்,கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதமான இலக்கை அடைகிறது !அல்லேலூயா!!
இன்றே உங்கள் நாள்!இப்போதே உங்கள் அற்புதத்தின் நேரம்!கர்த்தர் உங்கள் விரக்தியிலிருந்து உங்களை உயர்த்தி,உங்கள் இலக்கிற்கு உங்களை அழைத்துச் செல்வார்,அதற்காக நீங்கள் நித்தியமாக நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்,அவருடைய நிபந்தனையற்ற அன்பு மற்றும் விவரிக்க முடியாத பரிசு – இயேசு!
பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்தில் இன்று அவருடைய நீதியாகிய ஆடையின் ஓரத்தைத் தொடும்படி உதவுவீராக!ஆமென் 🙏
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனின் நீதியாயிருக்கிறீர்கள்!
வாழ்வில் விரக்தியின் மத்தியில் மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் இலக்கை அடைய உயர்த்தப்படுங்கள்.
கிருபை நற்செய்தி தேவாலயம்.