15-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய ஆளுகையை அனுபவியுங்கள்!
16. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது..ரோமர் 5:16 NKJV
இன்றைய தியானத்திற்குரிய வேத வசனத்தில், “பரிசு” என்பது பரிசுத்த ஆவியாகிய நபர் (DOREAH) என்று பொருள்படுகிறது,அதேசமயம் “இலவச பரிசு” என்பது இந்த நபராகிய பரிசுத்த ஆவியானவரின் வெளியரங்கமான செயல்படுதல் (CHARISMA ) என்று பொருள்படும்.
குற்றவாளியின் வாழ்க்கையில் தண்டனையாகிய தீர்ப்பு வழங்குவது நியாயப்பிரமாணத்தின் தலையாய கடமையாக இருக்கின்றது.மாறாக, பரிசுத்த ஆவியானவர் குற்றவாளியின் மீது தீர்ப்பு வழங்கும்போது அவனை நீதிமானாக அங்கீகரிக்கிறார்(நியாயப்படுத்துதல்). தீர்ப்பின் கீழ் விழுவதற்கு ஒரே ஒரு பாவம் போதுமானது ,ஆனால் குற்றவாளியின் எண்ணற்ற குற்றங்கள்- செய்த பாவங்கள் இருந்தபோதிலும், பரிசுத்த ஆவியானவர் கிருபையை அளித்து,அவனைக் குற்றவாளி அல்ல என்று அறிவிக்கிறார்.ஏனென்றால்,மனித தரத்தால் அல்லது தெய்வீக தரத்தால் பாவம் என்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்தையும் இயேசு தம்மீது நம்முடைய எல்லா பாவங்களையும் இயேசு சுமந்து தீர்த்து நம்மை என்றென்றும் நீதிமான்களாக அறிவித்தார். அல்லேலூயா!
என் அன்பான நண்பர்களே, உங்கள் கடந்த காலம்,உங்கள் நிகழ்காலத்தையும்,எதிர்காலத்தையும் வரையறுக்க முடியாது.பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனென்றும் நினைக்காமல் நம்மீது கொண்ட அன்பின் நிமித்தம் நமக்காக இயேசுவை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். அதாவது நாம் தெரிந்து செய்த பாவங்கள் அல்லது தெரியாமல் செய்த பாவங்கள், கடந்த கால, நிகழ்கால அல்லது எதிர்காலத்தின் பாவங்கள், நம் முன்னோர்களின் பாவங்கள் (ஆதாமுக்கு முந்தையது) அல்லது நம்முடைய சொந்த பாவங்கள் ஆகிய அனைத்தையும் பிதாவாகிய தேவன் தம் மகன் இயேசுமீது சிலுவையில் தீர்த்து முடித்தார்.
ஆகையால், இன்று பரிசுத்த ஆவியானவர் உங்களை நியாயந்தீர்க்கவில்லை,மாறாக அவர் உங்களை நியாயப்படுத்துகிறார்.(நீங்கள் ஒருபோதும் பாவம் செய்யாதது போல் உங்களை நீதிமான்களாக அறிவிக்கிறார்).
தேவன் உங்களுக்கு ஆதரவாக நிற்கும்பொழுது உங்களுக்கு எதிராக யார் இருக்க முடியும்?
யாரும் இல்லை! நீங்கள் ஆளுகை செய்ய விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்!! நீங்கள் பரிசுத்த ஆவியில் தேவ நீதியாயிருக்கிறீர்கள்!!! ஆமென் !!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய ஆளுகையை அனுபவியுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!
கிருபை நற்செய்தி பேராலயம் !