09-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் திடிரென்று தடைகள் அகன்று முன்னேற்றத்தை அனுபவியுங்கள்!
23. சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.
24. தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
25. தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார். யாத்திராகமம் 2:23-25 NKJV
இஸ்ரவேல் புத்திரர் எகிப்தியர்களால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்கள், அவர்கள் அடிமைத்தனத்திற்கு அல்லது கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்க வழியின்றி பரிதாபமாக திண்டாடினர், அப்பொழுது அவர்கள் மீதான கொடுமை மிகவும் கடுமையானதாகவும் அதை தேவன் மட்டுமே தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தனர்.அது இப்போது இல்லையென்றால் எப்போதுமே இல்லாத சூழ்நிலையாகிவிடும் என்று தேவனிடம் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் கூக்குரலிட்டார்கள்.
மேலும் அவர்களின் கூக்குரல் தேவனின் சிம்மாசனத்தை அடைந்தது மற்றும் அதன் விளைவாக 1. தேவன் அவர்களின் கூக்குரலைக் கேட்டார்; 2. தேவன் அவர்களுடைய முன்னோர்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்; 3. தேவன் இஸ்ரவேல் புத்திரரை இரக்கத்துடன் பார்த்தார், 4. தேவன் அவர்களை அங்கீகரித்தார். அவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் மிருகத்தனமான அடிமைத்தனத்திலிருந்து அவர்களை முற்றிலுமாக விடுவிக்க அவர் கீழே இறங்கினார்.
தேவன் மனிதகுலத்துடனான தொடர்புகளில் எப்போதும் கரிசனையோடே இருந்தார்.இயேசு மனித உருவில் பூமியில் வாழ்ந்தபோது,திரளான மக்கள் சுகத்திற்காகவும் மற்றும் ஆறுதலுக்காகவும் தேடுபவர்களை அரவணைப்போடு கட்டித்தழுவினார்.மேலும் அவர் இருதயம் நொறுங்குண்டவர்கள் மீது மிகுந்த இரக்கத்துடன் காணப்பட்டு எந்தவொரு நிபந்தனை இல்லாமல் அவர்கள் ஒவ்வொருவரையும் குணப்படுத்தினார். (மத்தேயு 14:14).
ஆம் என் அன்பானவர்களே, இந்த நாளில் உங்களது விரக்தியான சூழிநிலைகள் மேலும் நீங்கள் அனுபவிக்கும் வேதனையான வலி,ஆகியவற்றிற்கு எந்த பரிகாரமும் இருப்பதாகத் தெரியாத நிலையில்,இயேசுவே உங்கள் தீர்வாக மாறுகிறார்.சிந்தப்பட்ட அவருடைய இரத்தம் எப்போதும் உங்கள் சார்பாக தேவனிடம் கூக்குரலிடுகிறது.
இதில் உண்மை என்னவென்றால், உங்கள் வேதனையான வலியிலிருந்து வெளியேறும் உங்கள் அழுகை, பரலோகத்தில் தேவ பிரசன்னத்தில் இயேசுவின் இரத்தத்தின் அழுகையுடன் கலந்து, நித்திய ஆவியின் மூலம் உரத்த சத்தமாகவும் எதிரொலிக்கிறது, உடனே தேவன் அந்த கூக்குரலைக் கேட்கிறார்.அவர் இயேசுவுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூறுகிறார். தேவன் இரக்கத்தால் தூண்டப்பட்டு உடனடியாக பதிலளிக்கிறார்.அல்லேலூயா!
என் அன்பானவர்களே, இன்று உங்களது வாழ்வில் திருப்புமுனை உண்டாக்கும் நாள்! உங்கள் துக்கங்கள் மகிழ்ச்சியாக மாறிகிறது!! உங்கள் சுகம் திடீரென்று வெளிப்படுகிறது !!!அழுது புலம்புகிற நீங்கள் , இனிமேல் கிறிஸ்து இயேசுவோடு சேர்ந்து சிங்காசனத்தில் அமர்ந்து ஆளுகை செய்வீர்கள். ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் திடிரென்று தடைகள் அகன்று முன்னேற்றத்தை அனுபவியுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!