21-04-23
இன்றைய நாளுக்கான கிருபை !
ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவியுங்கள் !
19. வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
20. அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.(யோவான் 20:19-20) NKJV.
ஆண்டவருடைய சீஷர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்,ஏனென்றால் அவர்கள் எதிர்பாத்திருந்த சுக வாழ்வை தருபவர் மற்றும் தங்களை மீட்பார் என்று முழுமையாக நம்பிய தங்கள் இரட்சகர் யூதர்களின் திட்டமிடப்பட்ட சதியின் படி ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.
அவர்கள் அதுவரை இயேசுவோடு வெளிப்படையாகச் சென்றார்கள் ஆனால் இப்போது இப்படிப்பட்ட கொடுமை தங்களுக்கும் ஏற்படும் என்று அஞ்சி அவர்கள் இருந்த அறையில் யாரும் உள்ளே நுழையாதவாறு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்து பயத்தோடு காணப்பட்டனர் .
மரணம் தங்கள் இரட்சகரைத் தடுத்து7 நிறுத்த முடியாது என்பதை அவர்கள் அத்தருணத்தில் உணரவில்லை, ஆனால் ,நம் மீட்பர் சாவை வென்று உயிர்த்தெழுந்தார்.ஆண்டவராகிய இயேசு சிலுவையில் உலகத்தின் பாவத்தையும், மரணத்தையும் , முழுமையாக ஜெயித்தார் அவர் இப்போது (NOW ) கடவுள் மற்றும் இரட்சகர் !!!
கல்லறையை மூடிய கல் உருட்டப்பட்டது மட்டுமல்ல, இயேசு உள்ளே வருவதைத் தடுக்க மிகவும் பாதுகாப்பாக மூடப்பட்ட கதவும் அவரைத் தடுக்க முடியவில்லை. உயிர்த்தெழுந்த இயேசு கம்பீரமாக கல்லறைக்கு வெளியே சரீரமாக நடமாடினார் மற்றும் மூடிய கதவுக்கு ஊடாக கடந்து வந்து அவர்கள் நடுவே வந்தார் . அருமை! அனைவரும் வாயடைத்து பார்த்தனர் ! ஆம் உயிர்த்தெழுதலின் வல்லமையை தடுக்க யாராலும் முடியாதது ! அல்லேலூயா !
என் பிரியமானவர்களே, எந்த வகையான துக்கமோ, மனச்சோர்வோ உங்களை அடைத்திருந்தாலும், எந்த வகையான கவலையும் பயமும் உங்களை முடக்கி, உங்கள் வாழ்க்கையை மட்டுப்படுத்தியிருந்தாலும், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு இப்போது உங்கள் நடுவில் தோன்றுகிறார். ஆமென் !
அவர் உங்கள் பயத்தை ஆற்றல்மிக்க நம்பிக்கையாகவும்,
நோயை நிலையான ஆரோக்கியமாகவும்,
பலவீனத்தை அயராத வலிமையாகவும்,
அவமானத்தை புகழாகவும் மாற்றுகிறார்.
இது உங்கள் நாள்!இயேசுவின் நாமத்தில் இது உங்கள் நேரம்! ஏனென்றால் நம் மீட்பர் நம் மத்தியில் உயிரோடிருக்கிறார்!
ஆமென் 🙏.
ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்க்கையில் மாற்றத்தை அனுபவியுங்கள்!
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்.