30-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவைப் பற்றிய ஞானத்தையும் நமது ஆஸ்தியையும் பெற்றுத்தருகிறது!
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 NKJV
என் பிரியமானவர்களே, இந்த மாத இறுதிக்கு வரும்வேளையில்,ஆண்டவராகிய இயேசுவை ஒரு நபராக கிருபையுடன் நமக்கு வெளிப்படுத்திய தேவனின் பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நாம் ஒரு நபரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் அல்லது ஒரு நபரை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளலாம்.
சமூக ஊடகங்கள் மூலம் ஒரு நாட்டின் அதிபதியை அறியலாம் ஆனால் அதே ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் அறிவது என்பது வேறு,அது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் .
அதுபோலவே,மனித வாழ்வில் இயேசுவைப் பற்றிய அறிவைப் பெறுவதும்,பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்வதும் இரண்டு உச்சகட்டங்கள்.பிந்தையது மனித எதிர்பார்ப்புகள் மற்றும் பகுத்தறிவுகளுக்கு அப்பாற்பட்ட முடிவுகளைத் தருகிறது.
பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வெளிப்படுத்தும் போது, நம் வாழ்க்கை ஒருபோதும் அவ்வண்ணமாகவே இருக்காது.நமக்கு உள்ளே உள்ள தேவனுடைய ஆவியால் நாம் நித்தமும் மாற்றப்படுகிறோம் (2 கொரிந்தியர் 3:18).
பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வெளிப்படுத்தும் போது, நாம் கடவுளை தனிப்பட்ட முறையில் தேவனாக மட்டுமல்ல, நம்முடைய சொந்த அப்பாவாக ,பிதாவாக , அப்பா பிதா என்று பல பரிமாணங்களில் அறிவோம், ஏனென்றால்,தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பியுள்ளார்.( கலாத்தியர் 4:6). அல்லேலூயா!
பிதாவைப் பற்றிய இந்த நெருக்கமான புரிதல்,நமக்கான அவருடைய ஆஸ்தியையும், நமக்கான அவரது எதிர்காலத்தையும்,நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பையும் பெற நமக்கு வாய்ப்பளிக்கிறது.
_“நாம் கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு, பிதா நம்மேல் எவ்வளவு அன்பு கூர்ந்திருக்கிறார் என்று பாருங்கள்!_I John 3:1 NKJV
என் பிரியமானவர்களே, இந்த அனுபவங்கள் இயேசுவின் நாமத்தில் இன்று உங்கள் பங்காக மாற பிரார்த்திக்கிறேன்! ஆமென் 🙏
இந்த மாதம் என்னுடன் இணைந்ததற்கு நன்றி! வரவிருக்கும் மாதத்தில் தேவன் நமக்கு இன்னும் அற்புதமான ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார்! தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக!!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவைப் பற்றிய ஞானத்தையும் நமது ஆஸ்தியையும் பெற்றுத்தருகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.