06-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது.அவருடைய வார்த்தை நம் வாழ்வில் நுழைவதற்கு உதவிசெய்கின்றது!
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். வெளிப்படுத்துதல் 22:7 NKJV.
அவர் வரப்போகிறார் என்பதை அறிந்ததால்,”விரைவாக” அல்லது “திடீரென்று” வருகிறார் என்பது நிச்சயம் .இந்த புத்தகத்தின் தீர்க்கதரிசன வார்த்தைகளை வைத்திருக்க வேண்டும் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கடைப்பிடிப்பது என்றால் என்ன?அவை வேதாகமத்தில் எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்கள் மற்றும் மிக முக்கியமாக இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடுகள் என்பதாகும்.
நாம் எதை இருதயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதை சுருக்கமாகக் கூறுவோம்:
1.உங்கள் வாழ்க்கையில் குறிப்பாகச் சொல்லப்பட்ட அவருடைய வாக்குறுதிகள்/ தீர்க்கதரிசனங்களை இருதயத்தில் வைத்திருந்து அறிக்கையிடவேண்டும்.
2. நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்ற வாக்குமூலத்தை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.
3. நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் தேவன் நம் வாழ்வில் செய்த நன்மைகளை பாடிக்கொண்டே இருக்க வேண்டும் .
என் நண்பர்களே,மேலே உள்ளவைகளோடு நாம் இன்னும் கூடுதலாகச் சேர்க்கலாம். இருப்பினும், மேற்கூறிய மூன்று காரியங்கள் முக்கியமானவை அதை இப்போதைக்கு முதலில் கருத்தில் கொள்வோம் .
” இருதயத்தில் தக்க வைப்பது ஒரு பாக்கியம்” – அதாவது இயற்கையாக யாராலும் எப்போதும் வைத்திருக்க முடியாது.புத்தகத்தில் எழுதப்பட்டதை பாதுகாத்து வைத்துக்கொள்ள மேலிருந்து ஆசீர்வாதம் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட கிருபை தேவைப்படுகிறது.
யோவான் 1:17 கூறுகிறது, ” கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வந்தது”.ஆம்! அவர் அருளாலும், சத்தியத்தாலும உருவகப்படுத்தப்பட்டவர். அவர் உங்கள் வாழ்வில் வரும்போது, அவர் பேசியதை மனதில் தக்க வைத்து ,இயேசுவைக் குறித்து வெளிப்பாட்டின் மூலம் உடனடியாக அவருடைய ஆசீர்வாதத்தையும் ,அதிகாரத்தையும் பெற்றுக்கொள்வோம் . ஆமென் 🙏
அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, எங்கள் இதயங்கள் எப்பொழுதும் உங்களுக்காகவும் உமது அருமையான வார்த்தைக்காகவும் திறந்திருக்கிறது . உமது வார்த்தையின் பிரவேசம், எங்களுக்கு புரிதலைக் கொடுத்து, அற்புதங்களை வெளிப்படுத்தி, எங்கள் வாழ்வில் முதன்மை பெறட்டும். ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது.அவருடைய வார்த்தை நம் வாழ்வில் நுழைவதற்கு உதவிசெய்கின்றது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.