24-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து, ஆளுகை செய்ய இன்றே உயர்த்தப்படுங்கள்!
37. தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.
38.அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.லூக்கா 1:37-38 NKJV
கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்வதுதான்!
ஆம் என் அன்பானவர்களே,அன்று மரியாளின் வாழ்க்கையில் தேவன் கூடாததை செய்தது உண்மை என்றால், இன்றும் உங்கள் வாழ்கையிலும் தேவனால் செய்ய முடியாதது எதுவுமில்லை! அல்லேலூயா! இதை நம்புங்கள்!!
எந்த மனித/மருத்துவ ஈடுபாடும் இல்லாமல் ஒரு கன்னிப் பெண் குழந்தையுடன் கருத்தரிக்கப்படுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அதுதான் நம் தேவன்!
செங்கடலைப் பிளந்து,வறண்ட நிலமாக (சாலையாக) மாற்றி அதனூடாக 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நடந்து செல்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதுதான் நம் தேவன்!
இந்த தேவன் சிலருக்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறவரா? நிச்சயமாக இல்லை! “தேவனுக்கு எந்தப் பாரபட்சமும் இல்லை.” ரோமர் 2:11
இந்த தேவன் வேதாகம காலங்களில் மட்டும் செயலில் இருந்தாரா? கண்டிப்பாக இல்லை! “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்.” எபிரெயர் 13:8 . ஆம் அன்பானவர்களே!
இந்தக் தேவன் உங்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து,இன்று சாத்தியமில்லாததைச் செய்யத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியும்! (சங்கீதம் 139:1-6). “….. உங்கள் தலையில் உள்ள முடிகள் அனைத்தும் எண்ணப்பட்டிருக்கிறது. எனவே பயப்பட வேண்டாம்; அனேக அடைக்கலான் குருவிகளை விட நீங்கள் விசேஷித்தவர்கள். லூக்கா 12:7 . ஆம் அன்பானவர்களே!
யார் இந்த தேவன்? அவர் தான் மகிமையின் ராஜா! சேனைகளின் கர்த்தர்!! உன்னையும் என்னையும் உயர்ந்த மாட்சிமையுடன் அமரச் செய்ய தன்னை தாழ்த்தி தொழுவத்தில் பிறந்தார்! அவர் பெயர் இயேசு!
என் அன்பானவர்களே, உங்கள் பதில் என்னவாக இருக்க வேண்டும்?
“ஆண்டவரே,உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும் என்பதாக தான்!”ஆமென் 🙏
உங்களுக்கு என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆளுகை செய்ய இன்றே உயர்த்தப்படுங்கள்.
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!