மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களுக்காக பரிந்து பேசும் வழக்கறிஞராக பரிசுத்த ஆவியானவர் உதவுவதை அனுபவியுங்கள்!

21-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களுக்காக பரிந்து பேசும் வழக்கறிஞராக பரிசுத்த ஆவியானவர் உதவுவதை அனுபவியுங்கள்!

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:7 NKJV‬‬.

தற்போதைய சகாப்தம் பரிசுத்த ஆவியானவரின் சகாப்தம்.
யார் இந்த பரிசுத்த ஆவியானவர்?
பரிசுத்த ஆவியானவர் என்பவர் சில மாய மூடுபனி அல்ல.அவர் ஒரு நபர்! நம்முடைய கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியானவர் நபர் என்பதை குறிக்க “அவர்” என்ற பெயரை பயன்படுத்துகிறார்!
மேலும் அவரை நமது “உதவியாளர்” என்றும் அறிமுகப்படுத்துகிறார்.

உதவியாளர் என்ற சொல் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது மற்றும் இது கிரேக்க வார்த்தையான “பாராக்கிலி ட்டோஸ்” என்பதன் மொழிபெயர்ப்பாகும். ஆங்கிலத்தில் இந்த வார்த்தைக்கு சரியான சமமான வார்த்தை இல்லை,அதாவது ” ஒரு நபரை ஆதரித்து பேச அழைக்கப்பட்டவர் “(KJVல்),வழக்கறிஞர் (NIV, NLT)ல்,நண்பர் (message ல்) மற்றும் உதவியாளர் (ESV)ல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கிரேக்க இலக்கியத்தில், “பாராக்கிலி ட்டோஸ்” என்பது வழக்கறிஞர் என்று பொருள்படும், குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்க நீதிபதி முன் நிற்கும் வழக்கறிஞர். இந்த அர்த்தத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மோடு நின்று நமக்காக மன்றாடுகிறார் என்று அர்த்தம். அல்லேலூயா!

என் பிரியமானவர்களே,உலகம் முழுவதும் உங்களுக்கு எதிராக நின்றாலும், மோசேயின் நியாயப்பிரமாணம் உங்கள் மீது குற்றம் சாட்டினாலும்,நீங்கள் தவறியிருந்தாலும்,பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களுக்காக நின்று நியாயாதிபதியின் முன் உங்களுக்காக பரிந்து பேசுகிறார். அவர் ஒரு வழக்கிலும் தோல்வியடைந்ததில்லை,ஒரு வழக்கையும் இழக்கமாட்டார்.பரிசுத்த ஆவியானவரை உங்கள் துணையாக கொண்டு, நீங்கள் எப்போதும் இயேசுவின் நாமத்தில் வெற்றியாளராக இருப்பீர்கள்!

நீங்கள் எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டீர்கள் என்பது மட்டுமல்லாமல், நீங்கள் என்றென்றும் நீதிமான்கள் என்பதற்கும் அவர் சாட்சியாக இருக்கிறார். எனவே, நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்காக,இயேசுவுக்குத் தகுதியான அனைத்தையும் அவர் உரிமையுடன் வழக்காடி உங்களக்கு பெற்றுத் தருகிறார்.

என் அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் என்று அழைக்கப்படும் இந்த விலைமதிப்பற்ற நபரை அழையுங்கள். அவரிடம், “நீர் என் பாராகிளிட்டோஸ்” என்று கூறுங்கள்.உங்கள் வாழ்க்கையில் முழு அணுகலைப் பெற அவரை உங்கள் இதயத்திற்குள் அனுமதியுங்கள்,இந்த நாளில் உங்களுக்காக தேவனின் வாக்குறுதியை அவர் எவ்வளவு அழகாகப் பெறுகிறார் என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களுக்காக பரிந்து பேசும் வழக்கறிஞராக பரிசுத்த ஆவியானவர் உதவுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *