மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்!

27-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்!

4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:4, 8 NKJV

பரிசுத்த ஆவியானவர் பிதா நமக்கு அருளிய “வாக்குறுதியானவர்”,ஆவியானவர் நமக்குள் வரும்போது,நம் வாழ்வில் தேவனின் மற்ற எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு நமக்கு அனுப்பிய பரிசுத்த ஆவியானவர் பூமியில் வாழும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வாக அவரே இருக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் என்பவர் தேவன் கூறிய மற்றும் இப்போதும் கூறுகின்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகின்றவராயிருக்கிறார்.
அவர் இயேசு யார் என்பதன் வெளிப்பாடு..உலகிற்கு நம் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட எல்லையில்லாத இயேசு அவர்!

ஆவியானவர் நமக்குள் வரும்போது,நீங்கள் வரம்பற்ற,வெல்ல முடியாத வல்லமையைப் பெறுவீர்கள்,அதன் மூலம் நீங்கள் உலகிற்கு சாட்சியாக இருக்க முடியும். உங்கள் வார்த்தைகளை விட உங்கள் வாழ்க்கை உலகத்தாருக்கு சத்தமாக பேசும் .

மே மாதத்தின் இந்த இறுதி வாரத்தில்,எல்லையற்ற இயேசுவை உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்,அவர் எல்லாத் தடைகளையும் உடைத்து, அனைத்து இரும்புக் கம்பிகளையும் வெட்டி, மறைவான இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களையும் செல்வங்களையும் உங்களுக்கு பரிசாகப் பெறுவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஏனென்றால், இயேசு தன் களங்கமில்லாத கீழ்ப்படிதலினால், எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்து,என்றென்றும் நீதிமான்களாக்கினார். அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *