19-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,உங்கள் தோல்வியில் ஆளுகை செய்யும் அனுபவத்தை பெறுங்கள்!
9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். II கொரிந்தியர் 12:9 NKJV
நாம் நமது சொந்த பலம் அல்லது போதுமான ஆசீர்வாதம் நம்மிடம் இருந்தால், அவருடைய கிருபையைப் பெறவோ அல்லது அவருடைய வலிமையை பெறவோ பெறுவதற்கு இடம் எங்கே உள்ளது?
மின்னோட்டம் நேர்மறையிலிருந்து எதிர்மறைக்கு (இயற்பியலின் படி) எப்படிப் பாய்கிறதோ அதே போல கடவுளின் பலமும் அவருடைய பலத்திலிருந்து நமது பலவீனத்தில் (ஆவியின் படி) பாய்கிறது.
அதுபோலவே, உங்கள் பற்றாக்குறையில்தான் அவருடைய மிகுதி . உங்கள் பலவீனத்தில் தான் அவருடைய பலம் பூரணமாகிறது. உங்கள் நோயில் தான் அவருடைய தெய்வீக ஆரோக்கியம் வெளிப்படுகிறது. உங்கள் தோல்வியில் தான் அவரது வெற்றியும் வெளிப்படுகிறது.ஆம் அப்படியே ,மின்னோட்டம் நேர்மறையிலிருந்து இருந்து எதிர்மறைக்கு வருவதுபோல தேவனின் பொழிதலானது (SUPPLY) மேலிருந்து இருந்து கீழ் நோக்கி வருகிறது. .
ஆகையால், கர்த்தருக்குப் பிரியமானவர்களே,வாழ்வில் ஒவ்வொரு முறையும் நீங்கள் தோல்வியடையும் போதும், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஏமாற்றங்களையோ, மனச்சோர்வையோ அல்லது அவமானத்தையோ சந்திக்கும் போதும் ஒவ்வொரு முறையும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், கிறிஸ்துவின் வல்லமை உங்கள் மீது தங்கி, உங்களுக்குள் பாய்ந்து செல்லும்!
என் நண்பரே,இதில் பிரச்னை என்னவென்றால் நான் செய்த தவறுகள் அல்ல,மாறாக தவறான நம்பிக்கைதான். ஆம்,நமது நம்பிக்கை நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நமது உணர்ச்சி அந்த நினைவுகளை வெளிப்படுத்துகிறது.
எனது பலவீனம் மற்றும் குறைபாடுகளைப் பற்றி நான் நினைக்கும் விதத்தை மாற்றியவுடன், அவருடைய பெலன் எனது பெலவீனத்தில் பூரணப்படுத்தப்பட்டு கிறிஸ்துவின் வல்லமையை நான் அனுபவிக்க ஆரம்பிக்கிறேன்.
உங்கள் எல்லா குறைபாடுகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் அவருக்கு நன்றி செலுத்துங்கள், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! நீங்கள் ஒரு வெற்றியாளரை விட அதிகமானவராக இருக்கிறீர்கள் !! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து, உங்கள் தோல்வியில் ஆளுகை செய்யும் அனுபவத்தை பெறுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!
கிருபை நற்செய்தி பேராலயம் !