07-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!
3. அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
4. பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும். ஏசாயா 32:3-4 NKJV.
உலகத்தில் பிறர் பார்க்க முடியாத காரியங்களை பரிசுத்த ஆவியானவரே உங்களைப் பார்க்க வைக்கிறார். சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட பாலைநிலத்தில் உள்ள நீர் ஊற்றை பார்க்க ஆகாரின் கண்களை திறந்தார்.அதன்மூலம் கொடூர வெயிலின் காரணத்தால் மரணத்தின் விளிம்பில் இருந்த அவளது மகனின் தாகத்தைத் தணித்தார். (ஆதியாகமம் 21:19)
இஸ்ரவேல் தேசத்தில் நிலவிய கடும் வறட்சிக்கு( பஞ்சம்) முற்றுப்புள்ளி வைத்து,கோடிக்கணக்கான மக்களை பயங்கரமான மரணத்திலிருந்து காப்பாற்றிய பெரு மழையின் சத்தத்தை எலியா தீர்க்கதரிசிக்குக் கேட்கச் செய்ததும் பரிசுத்த ஆவியானவர் தாமே. (1 இராஜாக்கள் 18:41-45).
அதே பரிசுத்த ஆவியானவர் யோபுவின் புரிந்துகொள்ளுதலை திறந்து, சுய நீதியின் மூலம் விழுங்கப்பட்டு மரண படுக்கையிலிருந்த யோபுவை தேவனுடைய நீதியை விட்டு சுய நீதிக்கு சென்ற காரணத்தை புரியச்செய்தார். பின்னர், யோபுவின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் இழந்ததை விட இரண்டு மடங்கு மீட்டெடுத்துக்கொடுத்தார். (யோபு 42: 2-6,10,12).
பரிசுத்த ஆவியானவரே விசுவாசிகளை பரலோக மொழியில் (அந்நிய பாஷைகளின் வரம்) பேசவும், அவருடைய பரலோக ஆலோசனையைப் பெறவும்,நீதியின் பாதையில் நடத்தவும் செய்கிறார்.இது விசுவாசிகளை பூமியில் இருக்கும் போதே அனுபவரீதியாக பரலோகத்தை அனுபவிக்கச்செய்கிறது.ஆமென்
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் பங்கு இதுதான்- பார்க்கும் கண்கள்,கேட்கும் காதுகள்,புரிந்துகொள்ளும் இதயம் மற்றும் தெளிவாகப் பேசும் வாய்.தேவனின் இந்த ஆசீர்வாதங்கள் (ஆன்மீக உணர்வுகள்) உங்களை சமூகத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்,மற்ற எல்லா சமகாலத்தவர்களை விடவும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.நமது நீதியான இயேசுவின் நிமித்தம் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் உங்கள் அன்பான தேவனாகவும் மற்றும் சிறந்த நண்பராகவும் இருக்கிறார்,இந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க உதவுகிறார். ஆமென்
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,ஆன்மீக உணர்வுகள் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை நற்செய்தி பேராலயம் !!