15-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து, வரம்பற்ற ஆவியானவரின் வல்லமையோடு பூமியில் ஆளுகை செய்யுங்கள்!
11. மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். I கொரிந்தியர் 2:11 NKJV
படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மற்றும் படைப்புகளில், மனிதனே முதன்மையானவன் மற்றும் தேவனின் கைவேலையில் இதுவரை செய்த படைப்புகளிடம் இல்லாததைக் கொண்டுள்ள தனித்துவமானவன்.ஏனென்றால், மனிதன் மட்டுமே தேவனின் சாயலில் உருவானான்.
எனவே, தேவனை அறிந்துகொள்வதன் மூலம், உங்கள் உண்மையான சுயத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். படைப்பாளராகிய தேவனைத் தவிர வேறு யாராலும் உங்களை முழுமையாக வரையறுக்க முடியாது.
மனிதன் முக்கூட்டு அங்கமாக (மூன்று பகுதியுள்ளவனாக) வாழ்கிறான். அவன் ஒரு ஆவி, அவனுக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது, பூமியில் ஒரு உடலில் வாழ்கிறான். அவனது உடலால், அவன் சுவை, வாசனை, செவி கேட்க, பார்க்க மற்றும் உணர முடியும். அவனது ஆன்மாவுடன்,அவன் தன்னைப் பற்றி சிந்திக்க முடியும், தனது சொந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் மற்றும் தனது சொந்த முடிவை எடுக்க முடியும். இது அவனை ஒரு ஆளுமைக்குள்ளாக வைக்குகிறது. அவனே சொந்தக்காரர் (அவனது மனதையும் உடலையும் பொறுத்த வரை).
ஆனால் மனிதனின் ஆவி தேவனிடமிருந்து வந்தது, அதனால் தேவனே அதன் உரிமையாளர்.
எனவே, மனிதனின் ஆத்துமா அதன் செயல்பாட்டில் வரம்புக்குட்பட்டது, ஆனால், மனிதனின் ஆவியோ அதன் செயல்பாட்டில் வரம்பற்றது, ஏனெனில் அவனது ஆவி தேவனிடமிருந்து வந்தது _.
எனவே,உங்கள் வரம்பிற்குட்பட்ட ஆத்துமாவிற்கும்,உங்கள் உடலுக்கும் மேலாக உங்கள் ஆவியை வெளிப்பட அனுமதிக்கும் போதுதான் வரம்பற்ற உங்கள் உண்மையான திறனை நிரூபிக்க முடியும்.
உங்கள் ஆவி தேவனால் இயக்கப்படுகிறது! உங்கள் ஆத்துமா (உங்கள்) சுயத்தால் இயக்கப்படுகிறது!! உங்கள் உடல் உலகத்தால் ஈர்க்கப்பட்டு, உங்கள் ஆத்துமா தன்னால் அல்லது ஆவியால் சொல்வதைச் செயல்படுத்துகிறது.
அதுவே அவனது ஆவியால் இயக்கப்பட்டால், அவன் ஆன்மீக மனிதர் என்று அழைக்கப்படுகிறான்.
ஆனால் அது அவனது ஆன்மாவால் இயக்கப்பட்டால், அவன் மாமிசத்திற்குட்பட்ட மனிதன் அல்லது இயற்கை மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.
உண்மையான சுதந்திரம் என்பது நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்வதில்லை (ஆத்துமா வழிநடத்துகிறது). மாறாக உண்மையான சுதந்திரம் என்பது தேவனின் கண்ணோட்டத்தில் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்வது அதாவது ஆவியின் வழிநடத்துதலோடு செய்வதாகும்.
வரம்பற்ற மண்டலத்தில் இருந்து வரம்பற்ற உயிரினமாக செயல்பட உங்கள் ஆவியை உயிர்ப்பிக்க இயேசு வந்தார். ஆமென்
அவருடைய நீதியே (பரிசுத்த ஆவியானவர் ) உங்களை வரம்பற்றதாக ஆக்குகிறது! நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியிருக்கிறீர்கள். ஆமென்
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,வரம்பற்ற ஆவியானவரின் வல்லமையோடு பூமியில்
ஆளுகை செய்யுங்கள்.
உங்கள் அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை நற்செய்தி பேராலயம் !!