26-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய கிருபையின் நற்செய்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!
“நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும், மகிமையின் தகப்பனுமாகிய அவர், அவரை அறிகிற அறிவில் ஞானத்தையும் வெளிப்பாட்டின் ஆவியையும் உங்களுக்குக் கொடுப்பார்“;
எபேசியர் 1:17-18aNKJV
எந்தவொரு விசுவாசியும் செய்யக்கூடிய மிகப்பெரிய பிரார்த்தனை என்பது மனக்கண்களை திறப்பதற்கான பிரார்த்தனையாகும். அது கண்களின் அறிவொளியை பிரகாசித்தது,பல முனிவர்களை இதற்க்காக மனிதகுலத்தின் வாசத்தைவிட்டு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.அத்தகைய வாழ்க்கை முனிவர்களை எல்லா கவனச்சிதறல்களிலிருந்தும்,தேவன் விரும்பாத விஷயங்களிலிருந்தும் தடுத்து நிறுத்தியது.
ஆனால், கிறிஸ்துவின் நற்செய்தி என்பது தேவன் எவ்வாறு மனிதகுலத்தைத் தேடி பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார் என்பதைப் பற்றியது, மாறாக மதம் என்பது மனிதன் தேவனைத் தேட முயற்சி செய்வதை பற்றியது.
கிறிஸ்துவின் நற்செய்தி என்பது தேவன் மனிதகுலத்தை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைப் பற்றியது, ஆனால், தேவனைக் கண்டுபிடிக்க மனிதன் தன்னை எவ்வளவு வெறுக்க வேண்டும் என்பதையும் தேவனைப் பிரியப்படுத்த அவன் செய்ய வேண்டிய விஷயங்களையும் மதம் கற்பிக்கிறது.
கிறிஸ்துவின் நற்செய்தி என்பது, மனித குலத்தை தனது தயவினாலும்,ஆசீர்வாதங்களையும் அளவில்லாமல் நாம் பெறுவதற்கு அவர் விலைக்கிரயமாக தம் உயிரைக் கொடுத்தார் என்பது பற்றியது, அதேசமயம்,தேவனின் தயவையும் ஆசீர்வாதத்தையும் பெற மனிதன் எவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்பதில் மதம் கவனம் செலுத்துகிறது.
கிறிஸ்துவின் நற்செய்தி,பாவிகளில் மோசமானவர்களைக் கூட காப்பாற்றுகிறது, மாறாக மதம் பாவிகளைக் கண்டனம் மட்டும் செய்கிறது.அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லலாம்.
சுருக்கமாக சொல்வோமானால் மதம் என்பது வாழ்வில் எல்லவாற்றையும் இழந்து நிராயுதபாணியாய் நிற்பவனிடம் தேவனுக்காக அவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை அளிக்கிறது மாறாக ஆண்டவராகிய இயேசுவின் கிருபையின் நற்செய்தியானது அவர் எல்லாவற்றையும் அவனுக்காக செய்து முடித்திவிட்டார் என்பதை அவனை காணச்செய்து தேவைகளை பூர்த்தி செய்ய கிருபையளிக்கிறது.
என் பிரியமானவர்களே,இந்த வாரம் நாம் இம்மாத இறுதிக்கு வரும்வேளையில், இயேசுவின் தியாகத்தினால் ஏற்கனவே உங்களுக்குக் கிடைத்துள்ள தேவனின் அசாத்திய ஆசீர்வாதங்களை ஆன்மீக ரீதியில் பார்க்கவும் இயற்கையாக அனுபவிக்கவும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் புரிதலின் கண்களை ஒளிரச் செய்வாராக. ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய கிருபையின் நற்செய்தியின் மூலம் பூமியில் ஆட்சி செய்யுங்கள்!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!