மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதன்மூலம்,மூடிய கதவுகள் ஒவ்வொன்றும் இப்போது திறக்கட்டும்!

16-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதன்மூலம்,மூடிய கதவுகள் ஒவ்வொன்றும் இப்போது திறக்கட்டும்!

17. அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
18. அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
I சாமுவேல் 1:17-18 NKJV

என் அன்பானவர்களே,தேவ நீதியில்,உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன,மேலும் தேவனின் அமைதியில்,உங்கள் இதயங்களையும் மனதையும் ஒவ்வொரு மன அழுத்தத்திலிருந்தும் பாதுகாகக்ப்படுகிறீர்கள்.
நாம் அவருடைய நீதியின்மீது சாய்ந்து கொள்ள அல்லது அவருடைய நீதியை அடிப்படையாக வைத்து நம்தேவைகளை கேட்பதற்கு கற்றுக்கொண்டால், நம்முடைய கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். நீதிமான்களுக்கு இது அதிக நிச்சயமாய் இருக்கிறது!

இதைத்தான் அன்னாள் செய்தாள். அவளுக்கு குழந்தைகள் இல்லை. அவள் மலடியாக இருந்தாள், அவளுடைய கருப்பை மூடப்பட்டது. கருத்தரிப்பதற்கான ஒவ்வொரு வழி முறையையும் அவள் தீவிரமாக முயற்சித்தாள்,ஆனால் பயனில்லை காரணம் அவள் கருவறை கதவு மூடியிருந்தது.

மகிமையின் ராஜாவாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே, ஒவ்வொரு முழங்கால்களும் வணங்கும், ஒவ்வொரு மூடிய கதவும் திறக்கும். எந்தக் கதவும் அடைக்கப்படாமலும், எந்த ஆசீர்வாதமும் தடுக்கப்படாமலும் இருக்க, கர்த்தராகிய இயேசுவின் நீதியான செயல்கள்தான் காரணம். தேவனுடைய பார்வையில் சரியானதைச் செய்து,தேவனைப் பிரியப்படுத்தி தேவ நீதியை நிறைவேற்றியதே அதற்கு காரணமாய் இருக்கிறது.
இயேசுவின் நீதிக்கு இணையாக வேறு எவராலும்இருக்க முடியாது (“கடவுளே, உமது நீதி வானத்தை அடையும், பெரிய காரியங்களைச் செய்தவரே,தேவனே, உமக்கு நிகரானவர் யார்?என்று
சங்கீதம் 71:19 NIV)ல் பார்க்கிறோம்.அல்லேலூயா!

அன்னாள் தனது இயலாமையை தேவனிடம் விட்டுவிட்டு,அதற்கு ஈடாக அவரின் திறமையான தேவ நீதியைப் பெற்றாள். அப்பொழுது, அவளுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அவள் கர்ப்பப்பை திறக்கப்பட்டது. அவள் தேவனின் அமைதிக்குள் நுழைந்தாள், அதற்கு பின் வாழ்வில்அவள் முகம் சோகமாக இருந்தது இல்லை. ஆமென்!

என் பிரியமானவர்களே,இந்த நாளில் நீங்கள் உங்கள் சொந்த புரிதலில் சாய்ந்துவிடாமல், இயேசுவின் நீதியில் உங்களை ஈடுபடுத்தி,அவருடைய நீதியைப் பரிசாகப் பெறும்போது, ​தயவு உங்களைத் தேடி வந்து உங்களை ஒரு கேடயமாகச் சூழ்ந்து கொள்கிறது.

மகிமையின் ராஜா உள்ளே வருகிறார், ஒவ்வொரு மூடிய கதவும் இப்போது இயேசுவின் நாமத்தில் திறக்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதன்மூலம்,மூடிய கதவுகள் ஒவ்வொன்றும் இப்போது திறக்கட்டும்.

நம்முடையநீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10  ×  1  =