இன்று உங்களுக்குக்கான கிருபை
22 ஜூன் 2026
தலைப்பு:மாற்றமடைதலின் இலக்கு – பிதாவின் உன்னத நோக்கம்
வேதவசனம்:கொரிந்தியர் 3:18
“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமைமேல் மகிமையடைந்து, மறுரூபப்படுகிறோம்.”
நற்செய்தியின் இறுதி நோக்கம் பாவமன்னிப்பும் பரலோகப் பிரவேசமுமே என்று பல விசுவாசிகள் நினைக்கிறார்கள். இரட்சிப்பு என்பது ஒரு வாசலாக இருந்தாலும், அதுவே இறுதி இலக்கு அல்ல.
பிதாவின் மிக உயர்ந்த நோக்கம் இரண்டு பகுதிகளைக் கொண்டது, ஆனால் அவை பிரிக்க முடியாதவை: நம்மை அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்களாக மாற்றுவது; மற்றும் பூமியில் நமக்காக அவர் வைத்திருக்கும் மிகச் சிறந்தவற்றை — அதாவது எந்தக் கண்ணும் காணாத, எந்தக் காதும் கேளாத, எந்த மனித இருதயமும் சிந்திக்காத காரியங்களை — நாம் பெற்றுக்கொண்டு அவற்றை வெளிப்படுத்துவது. (ரோமர் 8:29; 1 கொரிந்தியர் 2:9).
இந்த நோக்கங்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன மற்றும் தெய்வீகமாக இணைக்கப்பட்டுள்ளன. பரிசுத்த ஆவியானவர் மற்றும் தேவவசனத்தின் ஊழியத்தின் மூலம் நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு மாற்றப்படும்போது, பூமியில் நமக்காக பிதா ஆயத்தம் செய்துள்ள மகிமையான காரியங்களைப் பெற்றுக்கொள்ளவும், அவற்றை நிர்வகிக்கவும், வெளிப்படுத்தவும் நாம் தகுதி பெறுகிறோம்.
எனவே,மறுரூபமடைதல் என்பது ஒரு முடிவு மட்டுமல்ல; அது நம்மை அவருடைய பூரணத்துவத்திற்குள் கொண்டுவருவதற்கான தேவனுடைய செயல்முறையாகும்.
நாம் எவ்வளவுக்கவ்வளவு கிறிஸ்துவைப் போல மாறுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு தேவனுடைய ராஜ்யத்தின் கண்ணுக்குத் தெரியாத உண்மைகள் நம் வாழ்வில் வெளிப்படையாகத் தெரியும்.
முக்கியக் கருத்து:
கிறிஸ்துவைப் போல மாறுவது தேவனுடைய செயல்முறை; அவருடைய மிக சிறந்ததை வெளிப்படுத்துவது தேவனுடைய பலன்.
ஜெபம்
மகிமையின் பிதாவே,என் வாழ்விற்கான உமது நித்திய நோக்கத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது பரிசுத்த ஆவியினாலும் உமது வசனத்தினாலும், என்னை இயேசுவின் சாயலுக்கு ஒத்தவனாக மாற்றி, எனக்காக நீர் ஆயத்தம் செய்துள்ள ஒவ்வொரு ஆசீர்வாதமும் என் வாழ்வில் வெளிப்பட செய்யும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
விசுவாச அறிக்கை
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்.
எனக்குள் இருக்கும் கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கையாயிருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் என்னை கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவனாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.
நான் மகிமைமேல் மகிமை அடைந்து நடக்கிறேன்.
தேவனுடைய மிகச் சிறந்தவை என் வாழ்வில் வெளிப்படுத்தப்படுகின்றன.
நான் அவருடைய மகிமையின் ஜீவனுள்ள சாட்சியாய் இருக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்.ஆமென். அல்லேலூயா!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
