இன்று உங்களுக்குக்கான கிருபை!
21 செப்டம்பர் 2026
சுதந்திரத்தின் மொழி: தவிப்பிலிருந்து மகிமைக்கு மாறுதல்!
வேதவசனம்
“சகல சிருஷ்டியும் இதுவரைக்கும் ஏகமாய் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறதென்று அறிந்திருக்கிறோம். அதுவுமல்லாமல்… நாமும்… நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரத்தை எதிர்பார்த்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.”ரோமர் 8:22–23
கர்த்தராகிய இயேசுவின் அன்புக்குரியவர்களே,
மகிமைக்கு – அதாவது மகிமையான சுதந்திரத்திற்கு – முன்னதாக ஒரு தவிப்பு இருக்கிறது.
சிருஷ்டி தவிக்கிறது (வசனம் 22),விசுவாசிகள் தவிக்கிறார்கள் (வசனம் 23), மற்றும் பரிசுத்த ஆவியானவர் தவிப்புகளோடே நமக்காக வேண்டுதல் செய்கிறார்ய (வசனம் 26) என்பதை ரோமர் 8 வெளிப்படுத்துகிறது. தவிப்பு என்பது எப்போதும் தோல்வியின் அடையாளம் அல்ல; சில சமயங்களில், அதைவிட மேலான ஒன்று வெளிப்படப்போகிறது என்பதற்கான சான்றாக அது அமைகிறது.
ஒரு குழந்தை பிறக்கவிருப்பதால் பிரசவ வேதனையில் இருக்கும் பெண் தவிக்கிறாள்.அந்த வலி உண்மையானதாக இருக்கலாம், ஆனால் அதுவே இறுதி இலக்கு அல்ல; அதன்பின் கிடைக்கும் பலன் மகிமையானதாக இருக்கும்.
இதே கொள்கை ஆவிக்குரிய வாழ்விலும் பொருந்தும். உங்கள் சுகாதாரம், குடும்பம், நிதிநிலை, தொழில் அல்லது சூழ்நிலைகள் குறித்து நீங்கள் தவிக்கும் காலங்கள் இருக்கலாம். ஆனால், உங்கள் தற்போதைய நிலைதான் உங்கள் இறுதி நிலை அல்ல என்று நற்செய்தி அறிவிக்கிறது.
மீட்பின் இறுதி இலக்கு மகிமையான சுதந்திரமும், நம் சரீரத்தின் மீட்பும் ஆகும்.
இயேசு உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இதை நிரூபித்தார்.அவருடைய சரீரம் உண்மையானதாகவும் தொட்டு உணரக்கூடியதாகவும் இருந்தது – அவரைக் காணவும், தொடவும், அடையாளம் காணவும் முடிந்தது – ஆனால் அது முன்பு இருந்த பூமிக்குரிய வாழ்வின் எல்லைகளுக்கு உட்பட்டதாக இருக்கவில்லை. அவர் உயிர்த்தெழுதலின் மகிமைக்குள் பிரவேசித்திருந்தார்; அந்த மகிமை நமக்காகவும் உரியது.
உங்கள் தவிப்பு உங்கள் கல்லறையாகாது. அவருடைய மகிமையே உங்கள் இலக்கு!
உங்களுக்குள் இருக்கும் குமாரத்துவத்தின் ஆவியானவர், உங்கள் தற்போதைய நிலை மகிமையில் முடியும் என்பதற்கான உத்தரவாதமாவார்.
ஜெபம்
அப்பா பிதாவே,எனது தற்போதைய தவிப்பு எனது இறுதி இலக்கு அல்ல என்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.உம்முடைய ஆவியானவர் மூலமாக, ஒவ்வொரு எல்லைகளிலிருந்தும் என்னை விடுவித்து, எனக்காக நீர் ஆயத்தம் செய்துள்ள சுதந்திரத்திற்கும் மகிமைக்கும் என்னை வழிநடத்தும். இயேசுவின் நாமத்தில்,என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் உம்முடைய மாற்றத்தை உண்டாக்கும் வல்லமையை அனுபவிக்கட்டும். ஆமென். 🙏
விசுவாச அறிக்கை
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாயிருக்கிறேன். நான் தேவனுடைய பிள்ளை. எனது தற்போதைய நிலையில் நான் சிக்கிக்கொள்ளவில்லை.மகிமையின் ஆவியானவர் எனக்குள் கிரியை செய்கிறார்; நான் தவிப்பிலிருந்து மகிமையை நோக்கி நகர்கிறேன்!
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்.
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
