இன்று உங்களுக்குக்கான கிருபை!
30 செப்டம்பர் 2026
புத்திரசுவிகாரத்தின் ஆவி உங்களுக்குத் தேவனுடைய மொழியைத் தருகிறது!
வேதவசனம்
“நீங்கள் மறுபடியும் பயப்படுகிறதற்கு அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.”ரோமர் 8:15
கர்த்தராகிய இயேசுவின் அன்புக்குரியவர்களே,
இயேசுவின் நிமித்தம் தேவனோடு ஐக்கியம் கொள்ளும்படி அவர் நம் வாழ்வில் அனுப்பிய பரிசுத்த ஆவியானவரே இந்த மாதம் முழுவதும் நம் தியானத்தின் மையப்பொருளாக இருக்கிறார்.
செப்டம்பர் மாதம் முழுவதும், புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பற்றியும், அவருடைய பிரசன்னம் நமக்குள் எதை உருவாக்குகிறது என்பது பற்றியும் நாம் தியானித்தோம்.
புத்திரசுவிகாரத்தின் ஆவி நாம் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. நாம் பயத்தில் வாழும் அடிமைகள் அல்ல;நம் பிதாவாகிய அன்பான தகப்பனாம் தேவனை அறிந்திருக்கும் குமாரர்கள் நாம்.
அவர் நம்மைப் பெலப்படுத்துகிறார்,இழந்த நிலையை மீண்டும் பெற உதவுகிறார், ஆவிக்குள்ளாக நடக்கக் கற்றுக்கொடுக்கிறார், மேலும் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய சுதந்திரத்திற்கு நம்மை வழிநடத்துகிறார்.
நற்செய்திக்கு ஒரு மகிமையான இலக்கு இருப்பதையும் நாம் பார்த்தோம்: அது புத்திரசுவிகாரம், நீதி, சுதந்திரம் மற்றும் இறுதியாக நம் சரீரங்களின் மீட்பில் மகிமை வெளிப்படுதல் ஆகியவை ஆகும். குமாரர்களாகிய நாம் அழியாத வார்த்தையின் மூலம் தேவனுடைய வித்தாக இருக்கிறோம்; நமக்குள் இருக்கும் கிறிஸ்துவே மகிமையின் நம்பிக்கையாய் இருக்கிறார்.
ஆனால் புத்திரசுவிகாரம் நாம் யார் என்பதை மட்டுமல்ல, நாம் பேசும் விதத்தையும் மாற்றுகிறது.
ஒரு குமாரன் தன் தகப்பனின் மொழியைக் கற்றுக்கொள்கிறான்
1 கொரிந்தியர் 2:7 இவ்வாறு கூறுகிறது:
“தேவனுடைய ஞானத்தை மறைபொருளாகப் பேசுகிறோம்; அந்த ஞானம் நம்முடைய மகிமைக்காக உலகத் தோற்றத்திற்கு முன்னரே தேவனாலே நியமிக்கப்பட்டது.”
மேலும் 1 கொரிந்தியர் 14:2 கூறுகிறது:
“அந்நிய பாஷையில் பேசுகிறவன்… ஆவியினாலே மறைபொருள்களைப் பேசுகிறான்.”
ஆகவே, செப்டம்பர் மாதம் நம்மை அடையாளத்திலிருந்து வெளிப்பாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது:
புத்திரசுவிகாரம் → ஐக்கியம் → வழிநடத்துதல் → சுதந்திரம் → மகிமை → தெய்வீகப் பேச்சு
மறைபொருள் என்பது மறைத்து வைக்கப்பட்ட தேவனுடைய ஞானம்;
வெளிப்பாடு என்பது வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய ஞானம்; மற்றும்
ஆவியில் பேசுதல் — அந்நிய பாஷைகள் மற்றும் அவற்றின் வியாக்கியானம் மூலம் — தெய்வீக ஞானத்தை வெளிப்படுத்துகிறது.
விசுவாச அறிக்கை
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன்.
நான் தேவனுடைய குமாரன். நான் தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுகிறேன்.
நான் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய சுதந்திரத்தில் நடக்கிறேன்.
நான் தேவனுடைய ஞானத்தைப் பேசுகிறேன்.
நான் ஆவியில் மறைபொருட்களைப் பேசுகிறேன்.
என் வார்த்தைகள் தேவனுடைய நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன; என் வாழ்க்கை அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறது.
ஜெபம்
பரிசுத்த பிதாவே, உம்மை என் ‘அப்பா‘ என்று அறியச் செய்யும் புத்திரசுவிகாரத்தின் ஆவிக்காக உமக்கு நன்றி. பயத்திலிருந்து சுதந்திரத்திற்கும், பலவீனத்திலிருந்து பலத்திற்கும், புத்திரத்துவத்திலிருந்து மகிமைக்கும் என்னை வழிநடத்துவதற்காக உமக்கு நன்றி.
இயேசுவின் நாமத்தில். ஆமென்.
எழும்பி ,பிரகாசி; ஏனெனில் உன் ஒளி வந்துவிட்டது!ஆமென். 🙏
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
