விசுவாசத்தினால் உண்டாகும் நீதி பேசுகிறது—உங்கள் நிலைமை வெளிச்சத்திற்கு (அங்கீகாரத்திற்கு) மாறிக்கொண்டிருக்கிறது!

இன்று உங்களுக்குக்கான கிருபை!
14 அக்டோபர் 2026

விசுவாசத்தினால் உண்டாகும் நீதி பேசுகிறது—உங்கள் நிலைமை வெளிச்சத்திற்கு (அங்கீகாரத்திற்கு) மாறிக்கொண்டிருக்கிறது!

வேதவசனம்
“விசுவாசத்தினால் உண்டாகும் நீதியோ இப்படி சொல்லுகிறது…”ரோமர் 10:6

கர்த்தராகிய இயேசுவின் அன்புக்குரியவர்களே,
“கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்” என்று நீங்கள் அறிக்கை செய்யும்போது, ​​கிறிஸ்துவின் நிறைவேற்றப்பட்ட கிரியையிலிருந்தே நீங்கள் பேசுகிறீர்கள். நீங்கள் தேவனுடைய மொழியைப் பேசுகிறீர்கள்—அது ஒளி, ஞானம் மற்றும் விசுவாசத்தின் மொழி.

இயேசு பிதாவினிடத்திற்கு ஏறினெடுத்து செல்லப்படுவதற்கு முன்,அவருடைய சீஷர்கள் அவரிடம், “ஆண்டவரே,இந்தக் காலத்திலா இஸ்ரவேலுக்கு ராஜ்யத்தை திரும்பக் கொடுப்பீர்?” என்று கேட்டார்கள் (அப்போஸ்தலர் 1:6). காலங்கள் மற்றும் வேளைகளைப் பற்றி அவர்களுக்குக் கேள்விகள் இருந்தன; ஆனால் இயேசு பரிசுத்த ஆவியானவரின் வருகையின் பக்கம் அவர்கள் கவனத்தைத் திருப்பினார்: “பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது நீங்கள் பலனடைவீர்கள்” என்று கூறினார் (அப்போஸ்தலர் 1:8).

பெந்தெகொஸ்தே நாளில், அந்த வாக்குத்தத்தம் நிறைவேறியது. சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்; ஆவியானவர் அவர்களுக்கு அருளியபடியே அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள் (அப்போஸ்தலர் 2:4).
ஆவியானவர் தங்களுக்கு அருளியபடியே பேச அவர்கள் வல்லமை பெற்றார்கள்; அவர்களுடைய வாழ்க்கை இனி ஒருபோதும் பழையபடி இருக்கப்போவதில்லை!

இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, நம்முடைய நீதியின் அடிப்படை நிறுவப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவரால் வல்லமைப்படுத்தப்பட்டு, நாம் இப்போது தைரியமாக தேவனுடைய வார்த்தையை அறிவிக்கலாம்; குழப்பத்தில் இருக்கும் உலகத்திற்கு அவருடைய ஞானத்தையும் – அவருடைய தீர்வையும் தெரியப்படுத்தலாம்.

சீஷர்களின் சூழ்நிலைகளில் ஏற்பட்ட வியக்கத்தக்க மாற்றத்தைக் கவனியுங்கள்:
அவர்கள் மாறினார்கள்—
மேலறையிலிருந்து பொதுவெளியில் சாட்சி பகரும் நிலைக்கு;
பெரும்பாலும் கவனிக்கப்படாத நிலையிலிருந்து ஊர் முழுவதும் பேசப்படும் நிலைக்கு.
பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.

பிரியமானவர்களே, உங்கள் கதை இன்று நீங்கள் இருக்கும் இடத்தோடு முடிந்துவிடுவதில்லை! _நீங்கள் அந்நிய பாஷைகளில் ஜெபித்து, தேவனுடைய வார்த்தைக்கு இசைவாகப் பேசும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் உங்களை வல்லமைப்படுத்துவார், உங்கள் பாதைகளை வழிநடத்துவார், மேலும் உங்களுக்காக அவர் ஆயத்தம் செய்துள்ள வாய்ப்புகளுக்கு உங்களைக் கொண்டுவருவார்.

மாற்றம் நிகழ்கிறது—அறியப்படாத நிலையிலிருந்து வெளிச்சத்திற்கு,
_கவனிக்கப்படாத நிலையிலிருந்து அங்கீகரிக்கப்படும் நிலைக்கு,_ மற்றும்
சாதகமற்ற சூழ்நிலைகளிலிருந்து தேவன் திட்டமிட்ட வாய்ப்புகளுக்கு! நினைவில் கொள்ளுங்கள், அதற்கான தீர்வு ஏற்கனவே உங்களுக்குள் இருக்கிறது: தேவனுடைய ஆவி உங்களுக்குள் வாசமாயிருக்கிறார்; விசுவாசத்தின் வார்த்தை உங்கள் இருதயத்திலும் உங்கள் வாயிலும் இருக்கிறது.

ஜெபம்:
அன்புத் தகப்பனே, எனக்குள் வாசமாயிருந்து, உம்முடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச எனக்கு வல்லமையளிக்கும் பரிசுத்த ஆவியானவருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். மறைவில் இருக்கும் காலங்கள் அனைத்தும் கடந்துபோய், எனக்காக நீர் ஆயத்தம் செய்துள்ள வெளிச்சமான நிலையை நான் காணச் செய்யும். தெய்வீகமாக நியமிக்கப்பட்ட வாய்ப்புகளை நோக்கி என் பாதைகளை வழிநடத்தும்; என் வாழ்வு உம்முடைய ஞானத்தையும் மகிமையையும் வெளிப்படுத்தட்டும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

விசுவாச அறிக்கை:
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன்! விசுவாசத்தின் ஆவியும் விசுவாசத்தின் வார்த்தையும் எனக்குள் இருக்கின்றன.
பரிசுத்த ஆவியானவரில் ஜெபிக்கும்போது, ​​தேவனின் ஒளியையும் ஞானத்தையும் கொண்ட மொழியைப் பேச நான் பெலனடைந்து வல்லமை பெறுகிறேன். மறைவான நிலையிலிருந்து தெய்வீக வாய்ப்புகளுக்கும், கவனிக்கப்படாத நிலையிலிருந்து அங்கீகரிக்கப்படும் நிலைக்கும், எல்லைகளுக்குட்பட்ட நிலையிலிருந்து முன்னேற்றத்திற்கும் நான் கடந்து செல்கிறேன்.
மகிமையின் ஆவியானவர் எனக்குள் கிரியை செய்கிறார்; உயிர்த்தெழுந்த இயேசுவின் மகிமையை என் வாழ்வு வெளிப்படுத்தும்!ஆமென். 🙏

உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *