17-04-23
இன்றைய நாளுக்கான கிருபை !
ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உயிர்த்தெழுந்த இயேசுவை இப்போதே அனுபவியுங்கள் !
14. இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
15. இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.(யோவான் 20:14-15 )NKJV.
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு மகதலேனா மரியாளுக்கு அவரது தோற்றம் ஆச்சரியமாக தோன்றியது.இயேசு சிலுவையில் இறப்பதற்கு முன்பு மரியாள் அவரை நன்கு அறிந்திருந்தாள் .ஆனால் உயிர்த்தெழுந்த இயேசு எந்த வடிவத்திலும் தோன்றலாம்,நாம் எதிர்பாராத தோற்றத்திலும் காட்சியளிக்கலாம். இன்று இயேசுவை நாம் ஆவிக்குரிய ரீதியில் பகுத்தறியவேண்டும் என்பதை நமக்குப் புரிய வைப்பதற்காக அவர் ஒரு தோட்டக்காரனைப் போல மரியாளுக்குத் தோன்றினார்.கடவுள் இயற்கை சூழலை விட ஆவிக்குரிய ஜீவியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஐந்து இயற்கை புலன்களின் உணர்வுகளை விட ஆவிக்குரிய உணர்வுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்.எனவே நாம் பார்வையால் காண்கின்ற காரியங்களை அல்ல, விசுவாசத்தினால் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
ஆம் என் அன்பானவர்களே ,நமக்குள் எப்போதும் விழிப்புடனும் ,உற்சாகத்துடனும் இருக்கும் ஆவிக்குரிய உணர்வுகளை நாம் தட்டி எழுப்பி விசுவாசத்தில் நடக்கவும், மனக்கண்கள் திறக்கப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவை இன்று காணவும் அழைக்கப்படுகிறோம். நம்முடைய இயற்கையான புலன்களுக்காக நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம், ஆனாலும் மாம்சத்தின் இச்சையை நிறைவேற்றாதபடிக்கு, ஆவியில் நடக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும் (கலாத்தியர் 5:16) ஆமென்!🙏
ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உயிர்த்தெழுந்த இயேசுவை இப்போதே அனுபவியுங்கள்!
கிருபை புரட்சி நற்செய்தி தேவாலயம்.