10-08-23
இன்றைய நாளுக்கான கிருபை !
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது அவருடைய நித்திய உடன்படிக்கையின் வல்லமையை அனுபவிக்கசெய்கிறது !
20. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் ,
21. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக . ஆமென். (எபிரேயர் 13:20-21) NKJV
கடந்த மாதம் அவருடைய சித்தத்தை அறிய வேண்டியதன் அவசியத்தை நாம் ஆராய்ந்தோம், அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயர்களுக்காக ஜெபித்த அதே நோக்கத்தில் ஜெபிக்கும்படி உங்களை ஊக்கப்படுத்தினேன் (கொலோசெயர் 1:9).
இந்த மாதத்தில், நம்முடைய நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு தம்முடைய சித்தத்தைச் செய்ய உங்களை வழிநடத்துகிறார். அல்லேலூயா!
அது எப்படி சாத்தியமாகும் ? நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தின் மூலமாக என்றால் அது என்ன? கர்த்தராகிய இயேசு, பிதாவாகிய தேவன் மற்றும் நித்திய ஆவியானவருக்கு இடையேயான பரலோக உடன்படிக்கை (ஒப்பந்தம்) இது என்பதாகும்.இயேசு தம் இரத்தத்தை மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிந்தியதால் ,பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் மனிதகுலத்தை மீட்ட்டார் .இதுவே ,இரத்தத்திலான நித்திய உடன்படிக்கையாகும் . பாவம் செய்து அதிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிறந்ததைச் செய்யவும் , மேலும் தேவன் அழைத்த அழைப்பின்படி அவர்களின் தொழில் துறையில் அவர்களை முதன்மையானவர்களாகவும் ,சிறந்தவர்களாகவும் ஆக்க்கவும் ,இதைக் கண்டு உலகத்தை வியக்கச் செய்வதே இந்த உடன்படிக்கையின் அதிசயமாகும்
இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! கடவுள் அனைவரையும் அழைக்கிறார். ஆனால் அனைவரும் அவருக்குப் பதிலளிப்பதில்லை. இருப்பினும், பதிலளிப்பவர்கள் உலகில் உள்ள ஞானிகளுக்கும், உன்னதமானவர்களுக்கும், வலிமையானவர்களுக்கும், உயர்ந்த சாதனை படைத்தவர்களுக்கும் இணையாக இருப்பவர்கள் அல்ல .
ஆனால், நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தின் வேலையானது பலவீனமான, மிகவும் முட்டாள் மற்றும் சிறியவர்களை, வலிமையான மற்றும் புத்திசாலிகளால் கூட அடைய முடியாத நிலைக்கு உயர்த்துவதாகும் . இந்த காரியம் உலகத்தாரை வியக்க செய்கிறது !
ஆம், நல்ல மேய்ப்பரின் நித்திய உடன்படிக்கையின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் காரணமாக இன்று அவருடைய மந்தையிலுள்ள ஆடுகளான நீங்கள் இதை அனுபவிப்பதே இயேசுவின் நாமத்தில் உங்கள் பங்கு. ஆமென் 🙏.
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது அவருடைய நித்திய உடன்படிக்கையின் வல்லமையை அனுபவிக்கசெய்கிறது !
கிருபை நற்செய்தி தேவாலயம் .