16-08-23
இன்றைய நாளுக்கான கிருபை !
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV.
அவருடைய நீதியின் பாதையில் நடப்பது என்பது, கர்த்தருடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதற்கு மனப்பூர்வமாகத் நாம் தெரிவு செய்வதாகும் .அது ஒரு தாழ்மையான தொடக்கமாக இருந்தாலும்,கடைசி முடிவு யாராலும் கற்பனை செய்வதை விட மிகவும் புகழ்பெற்றதாக இருக்கும்!
நீதியின் பாதையில் நடப்பது என்பது, இயேசு தன் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததை எனது ஒரே அடிப்படையாகக் கொண்டு சரியானதை, சரியான நேரத்தில், சரியான வழியில் பெறுவதாகும்.
நீதியின் பாதையில் நடப்பது என்பது, என் வாழ்வில் சவால்கள் வந்தாலும் அல்லது தடைகள் என் வெற்றியைத் தடுத்தாலும் அவருடைய நீதியானது பிதா எனக்கென்று முன்குறித்த ஸ்தலத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்,அங்கு எனக்காக பிரத்தியேகமாக ஏற்படுத்திய ஸ்தலத்தில் நான் ஒரு இணையற்ற மற்றும் சவாலற்ற ஆளுமை கொண்ட மனிதனாக வெளிப்படுவேன்.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே ,இன்று இயேசு என்று அழைக்கப்படும் தம் மேய்ப்பன் மூலம் தேவன் இதைச் செய்ய முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம் நான் நம்புகிறேன் என்றால் அவரை உங்கள் நீதியாக ஆக்குங்கள்,நீங்கள் நீதியின் பாதையில் நடக்கும்போது சில சவால்களை சந்தித்தாலும் நீங்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள்.
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்குறீர்கள் ! ஆமென் 🙏
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !
கிருபை நற்செய்தி தேவாலயம்