21-08-23
இன்றைய நாளுக்கான கிருபை!
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
(சங்கீதம் 23:3,4 ) NKJV.
மேற்கண்ட வசனத்தின் வாயிலாக சங்கீதக்காரன் நீதியின் பாதைகளில், மேய்ப்பரால் வழிநடத்தப்பட்ட அனுபவத்தை சாட்சியமளிக்கிறார்,அது அவர் வாழ்வில் கடினமான மற்றும் சவாலான நேரங்களிலும் கடவுளுடன் நடக்க அவரை ஆயத்தப்படுத்தியது, தன்னில் நல்ல வேலையைத் தொடங்கியவர் அதை முடிப்பார் என்று மேய்ப்பரை நம்பினார்.தேவன் உண்மையுள்ளவர் மற்றும் ஒருபோதும் நம்மைத் தோல்வியடையவிட மாட்டார்.
ஆம்,என் பிரியமானவர்களே,கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது, உங்கள் வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றி, ஆவியில் நடக்க உங்களைத் தயார்படுத்துகிறது.ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம், நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (நீதியின்) சரியான செயலை அடிப்படையாகக் கொண்டதாகும் ! பரிசுத்த ஆவியானவர் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டார்,ஏனென்றால் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பலனடையச் செய்யும்.தேவனின் நித்திய மீட்பீற்காக,இயேசு சிலுவையில் கிரையம் செலுத்தினார் மற்றும் தேவைக்கு அதிகமாக செலுத்தினார் – எனவே அந்த கிருபையோடு இந்த நாளையும் இந்த வாரத்தையும் இயேசுவின் நாமத்தில் அனுபவிக்கவும்!
என் அன்பானவர்களே, இன்று நான் நல்ல மேய்ப்பருடன் சேர்ந்து, இயேசுவின் பெயரில்,யாராலும் நிறுத்த முடியாத பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் வெளியிடுகிறேன்! இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் .ஆமென் 🙏
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !
கிருபை நற்செய்தி தேவாலயம் .