22-08-23
இன்றைய நாளுக்கான கிருபை!
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய தயவினால் சூழப்பட்டு நம்மை வெற்றியின் பாதையில் நடக்கச்செய்யும் !
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
(சங்கீதம் 23:3,4 ) NKJV.
பரிசுத்த ஆவியானவரின் முதன்மையான ஊழியமானது, இயேசுவே இரட்சகர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்துவதாகும்.மற்றும் விசுவாசிகளுக்கு இயேசுவே நம்முடைய யெகோவா சிட்கெனு -நீதியாயிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவதாகும். அல்லேலூயா!
ஆம் என் அன்பானவர்களே ! பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்டனம் செய்வதற்காக அனுப்பப்படவில்லை,மாறாக நீங்கள் நீதிமான்கள் என்று உங்களை நம்பவைக்க அவர் இங்கே நம்மோடிருக்கின்றார்.ஏனென்றால் கடந்த காலமோ அல்லது நிகழ்காலமோ அல்லது எதிர்காலமோ எதுவாக இருந்தாலும்,நம்முடைய எல்லா பாவங்களையும் இயேசுவின் சரீரத்தின் மீது தேவன் சுமத்தினார் . இயேசுவின் ஜீவாதார பலியின் காரணமாக நீங்கள் முற்றிலும் மன்னிக்கப்பட்டு நீதிமான்களாக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள் !
அவருடைய தயவைப் பெறுவதற்கான திறன் உங்கள் பாவங்கள் அனைத்தும் முழுமையாக மன்னிக்கப்பட்டது என்ற முழு உறுதியின் மீது உள்ளது!
நம் வாழ்வில் ஆவியில் நடக்க இயலாமைக்கும்,தெய்வீக ஆரோக்கியத்தில் நடக்க இயலாமைக்கும், அவருடைய தயவு தேவை என்பதை நாம் புரிந்து கொள்ளாததால் தான். நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டது என்ற உறுதியில் அவருடைய தயவை முழுமையாக பெற்றுக்கொள்ளுங்கள் .
எனவே,என் அருமை நண்பர்களே! மேற்கூறிய உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வதும், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்ற தொடர்ச்சியாக வாக்குமூலம் செய்வதும் அவருடைய தயவால் உங்களைச் சூழ்ந்துகொள்ளுகிறது . அவருடைய தயவு எல்லா தாக்குதல்களுக்கும் எதிராக ஒரு கேடயமாக செயல்படுகிறது (சங்கீதம் 5:8,12).
இன்று,வாழ்வில் வெற்றி நடைபோட அவர் உங்கள் நீதி என்று அறிக்கையிட்டு,தயவினால் சூழப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் இருங்கள்! ஆமென் 🙏
நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது,அவருடைய தயவினால் சூழப்பட்டு நம்மை வெற்றியின் பாதையில் நடக்கச்செய்யும் !
கிருபை நற்செய்தி தேவாலயம் .