24-08-23
இன்றைய நாளுக்கான கிருபை!
உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது !
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .
தேவன் நம்மைவிட்டு பல மைல்களுக்கு அப்பால் இருப்பதாகத் தோன்றும்போது அல்லது அவரை அடைய முடியாததாகத் தோன்றும் போது,பயணம் மிகவும் பயமாகவும், தெளிவற்ற நிலையாகவும்,நிச்சயமற்றதாகவும் தோன்றும் போது, மிக நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள் , இந்த கட்டத்தில் உங்கள் உணர்வு உங்கள் விசுவாசத்திற்கு வழிசெய்கிறது.இயற்கையானது இயற்கைக்கு அப்பாற்பட்டதை வெளிப்படுத்த வழிவகுக்கின்றது.முட்டைப்புழுவானது எப்படி ஒரு பட்டாம்பூச்சியாக மாறுகிறதோ நீங்களும் புதிய உங்களை வெளிப்படுத்துகுறீர்கள் !
உங்கள் பாதை பயமாக இருந்தாலும், நீங்கள் உயர்ந்து கொண்டே இருப்பீர்கள் ! பள்ளத்தாக்கு வழியாக நீங்கள் நடப்பது தண்ணீரின் மேல் நடக்கின்ற அனுபவத்தை அளிக்கிறது. அல்லேலூயா!
எல்லா அச்சங்களும் விசுவாசத்தால் விழுங்கப்பட்டன, சாவானது,சாவாமையினால் விழுங்கப்பட்டது . மரணம், ஆண்டவருடைய வெற்றியில் விழுங்கப்பட்டது .மனித பலவீனம் இறுதியாக தெய்வீகத்திற்கு தலை வணங்கி அவர் மாட்சிமையின் பாதத்தில் அடிபணிந்தது !
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறுகிறது ! சொல்ல முடியாத ஆனந்தக் கண்ணீர் மற்றும் மகிமையால் நிறைகிறது .
இயேசு,தன் உயிரைஉங்களுக்காக கொடுத்த நம்பிக்கையான மற்றும் உண்மையுள்ள
நல்ல மேய்ப்பன்! ஆமென் 🙏
உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.