04-09-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்கச்செய்கிறது !
8.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்:நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
~18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்
~(வெளிப்படுத்துதல் 1:8, 18) NKJV
என் அன்பான நண்பர்களே,ஆசீர்வதிக்கப்பட்ட செப்டம்பர் மாத வாழ்த்துக்கள்!இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் இயேசுவின் நாமத்தில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு,மகிமையான ஈவுகளை உங்களுக்கு அளிக்கும்படியாக பிராத்திக்கிறேன்
நாம் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள புத்தகங்கள், ஒத்திசைவுகள், சமூக ஊடகங்கள், பிரசங்கிகள் அல்லது ஆசிரியர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.ஆசிரியர்/ பிரசங்கியார் போதிப்பதின் மூலம் பெறும் ஆசீர்வாதம் இருந்தாலும்,பரிசுத்த ஆவியானவர் மற்றும் அவருடைய வார்த்தையின் மூலம் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்வது ஒரு பெரிய ஆசீர்வாதமாகும், ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட அனுபவம் மற்றும் அது நித்தியமான தெய்வீகத்தின் வெளிப்பாடாக மாறும். அல்லேலூயா!
என் அன்பானவர்களே, இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஆண்டவராகிய இயேசுவை சிறந்த முறையில் உங்களுக்கு வழங்க முயற்சிப்பேன்,அதனால் நீங்கள் அவரை தனிப்பட்ட முறையில் தியானிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர்,ஆண்டவராகிய இயேசுவை முற்றிலும் புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்துவார், மேலும் நீங்கள் நிச்சயமாக இயேசுவின் பெயரில் அவருடைய உயிர்த்தெழுதலை அனுபவிப்பீர்கள்!
இயேசுவே ஆல்ஃபாவும் ஒமேகாவும்,ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறார் ! ஆல்ஃபா மற்றும் ஒமேகா, ஆரம்பம் மற்றும் முடிவு,ஆகிய இயேசு கிறிஸ்துவின் இந்த வெளிப்பாடு- வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மூன்று முறை தோன்றுவதை நான் கவனித்தேன், அதாவது வெளிப்படுத்துதல் 1:8, 21:6 மற்றும் 22:13. ஒவ்வொரு முறையும் அது குறிப்பிடப்படும்போது, அது அவருடைய வருகையைக் குறிக்கிறது. ஆம், அவர் உங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரவும், உங்கள் இரட்சகராகவும், உங்கள் நீதியாகவும், உங்கள் ஆண்டவராகவும் அவரைப் பற்றிக் கொண்டதற்காக உங்களுக்கு வெகுமதி அளிக்கவும் வருகிறார்.
என் அன்பானவர்களே,நீங்கள் இந்த மாதம் மற்றும் இந்த வாரம் தொடங்கிய வேளையில்,அவர் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்த (encounter) வருகிறார், மேலும் அவர் உங்களுக்கான தனது திட்டங்களை விளக்கி கூறுகிறார் , உங்களில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி, உங்கள் உறுதிப்பாட்டிற்காக உங்களுக்கு வெகுமதி (reward )அளிக்கிறார்ஆமென் .
இயேசுவை நோக்கிப் பார்ப்பது அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்கச்செய்கிறது !
கிருபை நற்செய்தி தேவாலயம் .