03-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!
16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
17.தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
18. அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன். (சங்கீதம் 139:16-18) NKJV.
சாதி,மதம், நிறம், கலாச்சாரம், சமூகம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனைப் பற்றிய ஞானம் மற்றும் புரிதல் நம் உண்மையான தேவனுக்கு மட்டுமே உண்டு என்கின்ற சத்தியத்தை சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார்.
நம்மைக்குறித்த அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் கூட்டினால் பூமியின் மணலின் எண்ணிக்கையை விட அதிகம்! இது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாததும்,நம் சிந்தைக்கு எட்டாததுமாய் இருக்கிறது !.
நீங்களும் நானும் உருவாவதற்கு முன்பே இவை அனைத்தும் அந்த சுருளில் எழுதப்பட்டுள்ளன.உங்கள் முழு வாழ்க்கை வரலாற்ற்றை வரைந்து அதன் பாதுகாவலராக இருப்பவர் தேவன் மட்டுமே.அவரே நமது விசுவாசத்தை தொடங்குகிறவரும் மற்றும் முடிப்பவராயிருக்கிறார்.அவரே ஆல்பா மற்றும் ஒமேகா.அவர் பெயர் இயேசு! அல்லேலூயா!!
ஆம் என் அன்பானவர்களே,இயேசுவே உங்களுடைய மற்றும் என்னுடைய வாழ்க்கையின் ஒமேகாவாயிருக்கிறார்.உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களிலும் அவர்தான் இறுதி முடிவைக் கூறுவார் இந்த மாதத்தில் அவர் உங்களைப் பற்றிய உன்னதமான இறுதிச் சொல்லை வெளிப்படுத்துகிறார,அவர் உங்களை உயர்த்தி என்றென்றும் ஆசீர்வதிப்பார். அல்லேலூயா!
பரிசுத்த ஆவியே வாரும் ! எங்கள் வாழ்க்கையில் முழுவதுமாய் ஆட்கொள்ள உங்களுக்கு அனுமதி வழங்குகிறோம்,இதன்மூலம் இயேசுவின் பெயரில் எங்கள் வாழ்க்கையில் தேவனின் இறுதிக்கூற்றை புரிந்துகொண்டு அனுபவிக்க எங்களுக்கு உதவுவீராக.ஆமென் 🙏.
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல் !
கிருபை நற்செய்தி தேவாலயம் .