05-10-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்- அது உங்களுக்கான தேவனுடைய மிக சிறந்ததாகும் .!
4. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
5. அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.(வெளிப்படுத்துதல் 5:4-5) NKJV.
6. எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.
7. இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? (பிரசங்கி 8:6,7).
மனுகுலத்தைக் குறித்து எல்லா தகவல்களுக்கும் தேவன் தான் ஆதாரம் என்பதை யோவான் அறிந்திருந்தார், மேலும் யோவான் உட்பட உங்களையும்,என்னையும் உள்ளடக்கிய ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் அவர் தனது சுருளில் அனைத்தையும் எழுதியுள்ளார்.ஆனால்,அதில் எழுதியிருந்தவைகளை அவர் அறியாதபடி அந்த சுருள் முத்திரையிடப்பட்டிருந்ததால் யோவான் மிகவும் மனதுருகி அழுதார்.
எனக்கு அநேக நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்? இவை எப்பொழுது நிறைவேறும்,எந்த வகையில் இவை நிகழும் என்று யாரால் சொல்ல முடியும்? நாம் இதை அறியாமல் இருக்கும் போது துன்பம் அதிகரிக்கிறது.நாம் சிறந்ததை எதிர்பார்க்கிறோம், ஆனால் அது தாமதமாகும்போது சிறந்ததை விட குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். ஆம்,எதுவுமே நடக்காதபோது வேதனை அதிகரிக்கிறது,எப்போது நடக்கும் என்று தெரியாமல் வாழ்வில் ஒரு இலக்கில்லாமல் தத்தளிக்கிறோம் .
ஆனால் என் பிரியமானவர்களே,தேவன் உங்களுக்காக சிறந்ததைத் திட்டமிட்டிருந்ததால்,அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த அவர் தனது சொந்த குமாரனை ஆயத்தப்படுத்தி,நிறுத்தினார் அவர் தான் நம் நாதர் இயேசு கிறிஸ்து! அல்லேலூயா.
உங்களுக்காக தேவனின் சிறந்ததை வெளிப்படுத்த தேவன் தேர்ந்தெடுத்த நபர் இயேசு,இன்றே உங்களுக்கான தேவனுடைய நேரம் (KAIROS MOMENT ).இன்றே உங்கள் இரட்சணிய நாள்(ACCEPTED TIME) .அவர் தனது பரிசுத்த ஆவியை அனுப்பியதன் மூலம் தனது திட்டங்களை நிறைவேற்றுகிறார் (வெளிப்படுத்துதல் 5:6).
உங்கள் இருதயத்தைத் திறந்து, கர்த்தராகிய இயேசுவையும் அவருடைய பரிசுத்த ஆவியையும் உங்கள் இருதயத்தில் வரவேற்கவும்.நீங்கள் உங்கள் இதயத்தைத் திறக்கும்போது,உங்களுக்கான தேவனுடைய சிறந்தது அடங்கியிருக்கிற இலக்கை இயேசுவின் நாமத்தில் திறக்கிறார். ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்-உங்களுக்கான தேவனுடைய மிக சிறந்ததாகும்!
கிருபை நற்செய்தி தேவாலயம் .