17-11-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவிடம் நம்மை திரும்ப மீட்கச்செய்கிறது!
22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். லூக்கா 15:22-24 NKJV.
அந்நாட்களில் கொழுத்த கன்று ஒரு விசேஷ சந்தர்ப்பத்திற்காக பரிமாரப்படும் ஒரு சிறப்பு உணவாக இருந்தது,பிறந்த நாள்,ஆண்டுவிழா,ஒரு பெரிய கொண்டாட்டம்,அல்லது கிறிஸ்துமஸ் போன்ற ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்காக ஒரு குறிப்பிட்ட பொருளைப் பாதுகாத்து வைப்பது போல் ஆகும்.
சிறந்த அங்கியும்,விலையுயர்ந்த மோதிரமும்,ஒரு பெரிய ஜோடி செருப்பும் அணிந்து கொண்டாட்டம் தொடங்கினாலும்,விலைமதிப்பற்ற கொழுத்தக் கன்றை அடித்து சாப்பிடுவதுதான் கொண்டாட்டத்தின் உச்சம் என்று சொல்வேன்.அதுதான் அப்பாவின் அன்பின் உதாரணம்.
கொழுத்த கன்று ஒரு நாள் கொல்லப்பட வேண்டும்,ஆனால் அத்தகைய ஆடம்பரமான கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம் மூத்த மகனின் பார்வையில் சர்ச்சைக்குரியதாக மாறியது.
மூத்தவனைப் பொறுத்தவரை, தனது ஊதாரித்தனமான வாழ்க்கையின் மூலம் நேரத்தையும்,ளங்களையும் வீணடித்த அவனது இளைய சகோதரன் திரும்பி வருவது அனைவரின் நேரத்தையும் வீணடிக்கும் வீணான முயற்சியாகக் காணப்பட்டது.
ஆனால், தந்தைக்கு, இளைய மகன் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் இறந்துவிட்டான், இப்போது அவன் உயிர்த்தெழுந்தான் (எபேசியர் 2:1). அவன் மீட்க முடியாத அளவுக்கு தொலைந்து போனான், ஆனால் இப்போது அதிசயமாக கண்டுபிடிக்கப்பட்டான்.ஆகவே கொழுத்த கன்று தான் தியாகம் செய்யப்பட்ட தந்தையின் மிக நேர்த்தியான மற்றும் விலைமதிப்பற்ற பொருளாகும்.தந்தையின் தியாகத்தின் விளைவாக இளைய மகன் மீண்டும் சாவிலிருந்து மீட்கப்பட்டான்,தொலைந்து போய் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டான். .
ஆம் என் பிரியமானவர்களே,பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை நமக்காக பலியிட்டார்,அதனால் நாம் ஒருபோதும் இறக்க மாட்டோம் மாறாக நித்திய ஜீவனைப் பெறுவோம்.நாம் இழந்தவற்றை மீண்டும் பெறுவோம் . நம் தந்தையான தேவனுடன் என்றென்றும் நீதியுள்ளவர்களாக இருப்போம்! அல்லேலூயா 🙏
தேவன் உங்களுக்கு தேவைப்பட்டதை கொடுக்க அவர் எதையும் செய்ய காத்திருக்கிறார்.அவர் உங்கள் ஆத்துமா மீது ஆர்வம் காட்டுகிறாரே தவிர உங்களுடைய பொருட்கள் மீது அல்ல.நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே அவர் உங்களை ஏற்றுக்கொள்கிறார்.நீங்கள் இருப்பது போல் அவரிடம் வாருங்கள்! ஆமென் 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவிடம் நம்மை திரும்ப மீட்கச்செய்கிறது.
கிருபை நற்செய்தி தேவாலயம்.